பிரதமரும் அவரின் துணைவியாரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் ஒரு பெண் ஐந்தாவது மாடியிலிருந்து மஞ்சள்நிற பலூன்களைக் கீழே வீசி எறிந்தது மரியாதைக் குறைவான செயல் என கோலாலும்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று கூறப்பட்டது.
அந்த மரியாதைக் குறைவான செயலைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுள்ள பில்கிஸ் ஹிஜ்ஜாஸின் வழக்கில் இன்று எட்டாவது சாட்சியாக விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் இஸ்வான் பைஜான் சாட்சியமளித்தார்.
“நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரும் 24 நாடுகளின் தூதர்களும் கலந்துகொண்ட அந்நிகழ்வில் பில்கிஸின் மரியாதைக் குறைவான செயல் நாட்டை அவமதிக்கும் செயலாகும்”, என்று இஸ்வான் தெரிவித்தார்.
ஒரு நடனமணியும் பிரபல கட்டிடக் கலை வல்லுனருமான ஜிஜ்ஜாஸ் கஸ்தூரியின் மகளுமான பில்கிஸ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-இல் புக்கிட் பிந்தாங்கில் உள்ள பெவிலியன் விற்பனை வளாகத்தில் அந்த மரியாதைக் குறைவான செயலைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுள்ளார்.
1955 சிறுகுற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14-இன்கீழ் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடின பட்சம் ரிம100 அபராதம் விதிக்கப்படும்.
மக்கள் இனி மஞ்சள் கலர் UNDEWEAR போட்டால் புது ag atharkku மர்ம பீடத்தில் ஊசி நுழைக்கும் தண்டனை கொடுக்கபடனுமாம்
என்று நாடாளுமன்றத்தில் ஹடியை தாக்கல் செய்ய சொல்ல போறானாம் .தமிழனே அடே தமிழனே sg பெசரிலும் கோலா கண்க்சரிலும் ஒரு ஒட்டு bn KKUM PAS SUKKUM போகாமல் பார்த்து கொள்ளுங்கள் கோவில் உடைப்பு சாகிர் பிரவேஷம் அதை மேலே குறிப்பிட்ட இரண்டு நக்கி கட்சி தலைவனுங்க சென்று பார்த்தது பிறகு ஈPஓஃ கோவில் உடைப்பு இது எல்லாம் ஞாபகம் வைத்து அமனஹ்வுக்கு உங்கள் வோட்டை போடணும் எப்படி
கண்டிப்பாக தமிழன் வோட்டு அமனஹ்வுக்கே பயப்படடீர்கள் பில் bull