திருட்டை ஒரு வியாதிக்கு ஒப்பிட்ட பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அதைக் குணப்படுத்துவதற்கான ஒரே மருத்துவம் ஹூடுட் சட்டப்படி கையைத் துண்டிப்பதுதான் என்றார்.
நேற்றிரவு, கோலக்கங்சாரில் மலாய்க்காரர்கள் அதிகமாக வாழும் பகுதியான ஆர்பிஎ4 இல் சுமார் 300 பேர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய ஹாடி, மக்கள் கைகள் துண்டிக்கப்படுவது குறித்து பயப்படுகிறார்கள். ஆனால், அது உண்மையில் மனித வியாதியைக் குணப்படுத்துவதற்கான ஆண்டவனின் கருணை, ஏனென்றால் திருடுவது ஒரு கெட்ட சமூக வியாதி என்று உபதேசம் செய்தார்.
மருத்துவர்கள் கை, கால்களைத் துண்டிக்கிறார்கள். அதைப் பற்றி எவரும் கேள்வி கேட்பதில்லை என்று முத்தாய்ப்பு வைத்துப் பேசிய ஹாடி, ஒரு கையை வெட்டுவது திருடனை அச்சுறுத்துவதற்காகும், ஏனென்றால் திருடும் வியாதியைக் குணப்படுத்துவதற்கு உடம்பு உறுப்புகளைத் துண்டிப்பதைத் தவிர வேறு எந்தச் சட்டத்தாலும் அதைச் செய்ய இயலாது என்றார்.
உண்மைகள் தான்……… திருட்டு , விபச்சாரம் , ஓரின சேர்கை இவை அனைத்தும் ஒரு வகையான நோய் அல்லது அதற்க்கு அடிமை ஆகிவிடுவது இதற்க்கான மருந்து பிரம்படி மட்டுமே என்று ஜப்பானை சேர்ந்த ஒரு மருத்துவ குழு கண்டறிந்து உள்ளது . அங்கே ஒரு மருத்துவ மனையும் இயங்கி வருகிறது . யார் இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியபிறகு பிரம்பால் அடிக்க படுவார்கள்
பல ஆண்டுகாலமாக ஹூடூட் சட்டம் நடப்பில் உள்ள மற்ற நாடுகளில் குற்ற செயல்கள் குறைந்த்ததற்கான சான்று ஏதுமில்லையே!
ஹாடி சொல்வது வேத வாக்கல்ல .அவரும் சராசரி மனிதனே .
அவர் கூறுவது சரி எனில் இன்று மத்திய கிழக்கு நாடுகளில் அமைதிப்பூங் கா க்களை மட்டுமே காண வேண்டும் .இல்லையே
உங்களுக்கோ உங்கள் பிள்ளைகளுக்கோ இந்தச் சட்டத்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை. குறிப்பாக அரசியல்வாதிகளுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. பாவம்! பொது மக்கள் தான் அனுபவிப்பவர்கள். ஒரு பெண்ணைக் மானபங்கம் செய்துவிட்டு நாலு பேரைச சாட்சியாகக் கூட்டிக்கொண்டு வா என்றால் …இது போன்ற சட்டங்கள் தேவையா?
குற்றம் ஒரு வியாதி, ஹூடுட் மட்டுமே அதைக் குணப்படுத்தும் என்றால் “ஹூடுட்டில் தேர்ச்சிபெற்ற மருத்துவரை” வெளிநாட்டிலிருந்தா இறக்குமதி செய்ய போகிறீர்கள் ?
பகுத்தறிவு இல்லா மதவெறியனின் பிதற்றல்– இவனெல்லாம் பல இன மக்கள் நாட்டின் தலைகளில் ஒன்று– கொள்ளை அடிக்கும் பெரிய தலை இருக்கும்போது இதெல்லாம் நடக்கும்– இதுதான் 3ம் உலக பெருமைகள்.
ஹடி ஹூடுட் சட்டம் தேவையா தேவை இல்லையா என்பதை நீங்களும் ஆளும் அரசாங்கத்தினரும் முடிவெடுக்கும் முன் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதருக்கொப்ப பொது வாக்கெடுப்பை நடத்தினால் இதற்கொரு ஒரு நல்ல தீர்வு பிறக்கும்
இஸ்லாம் ஒரு புனித மதம் மற்ற மதம் போலே. அதில் உள்ள குருமார்கள் பண்ணுகிற கோல்மால் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம். தான் என்ற எண்ணமும் அகம்பாவமும் தான் காரணம். மனிதன் மனித நெறியோடு, மனித தன்மையோடு, மனித நேயத்தோடு, மனிதனாக வாழ முன்னோர்களால் உருவாக்கபட்டது தான் இந்த மதம். ஆனால் இன்றோ அது ஒரு வியாபாரமாக மாறிவிட்டது. வலியவன் எளியவனை வதைக்கும் ஆயுதமாக மாறி விட்டது. அன்பில் இறைவனை காணாமல் தெரியாமல் கண் மூடி அலைகிறார்கள். என் கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
இன்பமே சூழ்க. எல்லோரும் வாழ்க.
ஒரு மனிதன் ஏன் திருடுகிறான் என்று அறிந்து அதற்கு தீர்வு காண்பதே சிறந்தது. சரியான வேலை வாய்ப்பு அமைத்து, பொருளாதரம் சீர்செய்து விட்டு, அதன் பின்பு அவன் திருடினால் அது குற்றம். சரியான வேலை கிடைக்காமல், கொடுக்கபடாமல் பொருளாதாரம் சிக்கலில் தன் குடும்பத்தினரின் பசியை போக்க, திருடினால் குற்றமா?
முதலில் இஸ்லாம் அன்பர்கள் இதை செயலில் காட்டதும். அவர்களின் மதத்தில் உள்ளது தானே. அவர்கள் செயலில் நிருபிவிக்கட்டும். பின்பு மற்ற மதங்களில் பரவிடலாம் ……..
sivadharmam !
வியாபாரமாக அல்ல ! நம் நாட்டு முஸ்லீம் அரசியல்வாதிகள் அவர்களது “அரசியல் சாக்கடைக்கு” இந்த மதத்தை பலிகடாவாக்கி விட்டனர்.