பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் முன்வைத்துள்ள தனி உறுப்பினர் சட்டவரைவுக்கு ஆதரவு அளிக்காது போனால் அது அம்னோவைப் பாதிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
“அது (சுங்கை புசாரிலும் கோலா கங்சாரிலும்) அம்னோவையும் முஸ்லிம் வாக்காளர்களையும் பாதிக்கலாம்”, என பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.
அவ்விவகாரத்தில் கருத்திணக்கம் காண பிஎன் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என நஜிப் வாக்குறுதி அளித்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது தகியுடின் இவ்வாறு கூறினார்.