கோலா கங்சார் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்வதற்கு வாக்காளர்கள் அத்தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பிஎன் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும்.
அப்பகுதிக்கென அரசாங்கம் பல மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, வாக்காளர்கள் பிஎன் வேட்பாளர் மஸ்துரா முகம்மட் யாசிட்டுக்குக் கொடுக்கும் ஆதரவு அத்திட்டங்கள் சீராக அமலாக்கம் காண உதவும் என்றார்.
“கோலா கங்சார் மக்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறோம். அது இப்போது பிஎன்னுக்கு வாக்குகளாக மாறுவதைக் காண விழைகிறோம்”, என நேற்றிரவு கோலா கங்சார் கம்போங் பெண்டா பாஞ்சாங்கில் உள்ள மாவட்ட வாக்களிப்பு மையத்தில் உரையாற்றியபோது ஜாஹிட் கூறினார்.
அப்படி எதிர்கட்சிக்கு வாக்களித்து அவர்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு மேம்’மாடுகள்’தான் மேய்க்க வேண்டி வரும்!