கர்பாலின் முன்னாள்-காரோட்டுனர் ஆபத்தான முறையில் காரோட்டிய குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்

karகாலஞ்சென்ற  கர்பால்  சிங்கின்  முன்னாள்-காரோட்டுனர், சி. செல்வம்,  ஈராண்டுகளுக்கு   முன்னர்  முரட்டுத்தனமாகவும்  ஆபத்தான   முறையிலும்  காரோட்டி   டிஏபி  தலைவருக்கு   மரணம்   விளைவித்தார்  என்ற  குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்டார்.

அரசுத்  தரப்பு   செல்வம்  குற்றம்  புரிந்தார்  என்பதற்குத்  தகுந்த   ஆதாரங்களைக்  காண்பிக்கவில்லை என மாஜிஸ்ட்ரேட்  முகம்மட்  இப்ராகிம்  முகம்மட்  குலாம்  கூறினார்.

ஒரு  இந்திய  குடிமகனான  செல்வம்  தீர்ப்பைக்  கேட்டு  மிகவும்  மகிழ்ந்தார்.. விரைவில்  அவர்  இந்தியா  திரும்புவார்.

“குடும்பத்தைப்  பார்க்க  தாயகம் திரும்புவதை  நினைக்கையில்  மகிழ்ச்சியாக  இருக்கிறது”, என்றாரவர்.