பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி இன்று கோலா கங்சாரில் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துகிறார். அதில் ரோஸ்மா மன்சூர் தனி ஜெட் விமானத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்ட விவகாரம் பற்றி மேலும் பல தகவல்களை வெளியிடுவார் என்பதால் அதைக் கேட்பதற்காகவே கோலா கங்சார் வந்துள்ளார் ரோஸ்மாவின் உதவியாளர் ரிசால் மன்சூர்.
ரம்லி கூறுவதைக் குறிப்பெடுக்க அங்கு வந்திருப்பதாக தெரிவித்த ரிசால், அப்போதுதான் அதற்குச் சரியான முறையில் பதில் அளிக்க முடியும் என்றார்.
“அவர் சொல்வதை நானே கேட்க விரும்புகிறேன். இதற்குமுன் ஊடகச் செய்திகளிருந்துதான் அவர் பேசுவதைத் தெரிந்து கொண்டேன்”, என்று ரிசால் கூறினார்.
தாம் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்வதில் ரபிசிக்கு ஆட்சேபணை இருக்காது என்றும் அவர் நம்புகிறார்.