1எம்டிபி தலைவர் அருள் கண்ட கந்தசாமி, இன்று சுங்கை புசார் வந்திருந்தார்.
பிரதமர்துறை ஏற்பாடு செய்திருந்த தேசிய விவகாரங்கள்மீதான பேச்சு என்னும் நிகழ்ச்சிக்காக அருள் அழைக்கப்பட்டிருந்தார்.
பிஎன் வேட்பாளர் புடிமான முகம்மட் ஸோதியும் அந்நிகழ்வுக்கு வந்திருந்தார். ஆனால், அவர் மேடையேறவில்லை.
இடைத் தேர்தல் பரப்புரைக்காகத்தான் வந்தாரா என்று வினவியதற்குப் பதிலளிக்காமலேயே அந்த இடத்தைவிட்டு அகன்றார் அருள்.