பிலிப்பின்சின் அபு சாயாப் தீவிரவாதக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட சரவாக்கியர்களை விடுவிப்பதற்காக ரிம12 மில்லியன் பிணைப்பணம் திரட்டப்பட்டதில் அரசாங்கத்தின் பங்கு என்னவென்பதை உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“ஜாஹிட் கடத்தலுக்குப் பிணைப்பணம் கொடுப்பதை அரசாங்கம் ஆதரிப்பதில்லை. அதற்காக அது பணத்தைப் பயன்படுத்தாது என்று கூறினார்.
“அப்படியானால் ரிம12மில்லியன் திரட்டுவதில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகிறதே, அது ஏன்?”, என பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ வினவினார்.
திரட்டப்பட்ட பணம் பிலிப்பின்சில் உள்ள ஒரு இஸ்லாமிய அமைப்புக்குக் கொடுக்கப்படும் என்று கூறியிருப்பது அப்படித்தான் நினைக்க வைக்கிறது என்றாரவர்.
“பிணையாளிகளை விடுவிப்பதற்குத்தான் பணம் திரட்டப்படுகிறது என்ற எண்ணம் ஏற்பட்டிருந்ததால் அரசாங்கம் அது பற்றி விளக்க வேண்டும்”, என டிஏபி-இன் தேசிய சட்டப் பிரிவுத் தலைவருமான கோபிந்த் கூறினார்.
பொதுமக்களிடமிருந்தும் பணம் பெறப்பட்டிருக்கிறது என்பதால் அவர்களுக்கும் அது பற்றித் தெரிந்துகொள்ள உரிமை உண்டு என்றாரவர்.
ஏப்ரல் முதல் தேதி, நான்கு சரவாக் கடலோடிகள், சாபாவின் பூலாவ் லிகிதானுக்கு அப்பால் ஒரு இழுவைக் கப்பலிலிருந்து அபு சாயாப் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.
அண்மையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதால் அவர்களின் விடுவிப்பதற்காகத் திரட்டப்பட்ட பணம் பிலிப்பீன்சில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்றுக்குக் கொடுக்கப்பட்டதாக நேற்று உள்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதனிடையே, அது பற்றிக் கருத்துரைத்த சுபாங், ஷா ஆலம் பயனீட்டாளர் சங்கத் தலைவர் ஜேக்கப் ஜார்ஜ், அப்பணம் பிணையாளிகளின் உறவினர்களுக்கும் பொதுமக்களுக்கும் சொந்தமானது என்றும் அது அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
“அது அரசாங்கத்தின் பணமல்ல என்பதால் அதை ஒரு இஸ்லாமிய அமைப்புக்குக் கொடுக்க அவர்(ஜாஹிட்) யார்? இது உச்சகட்ட பொறுப்பின்மையைக் காட்டுகிறது. இது அடியோடு ஏற்க முடியாத ஒரு செயல்”, என்றவர் சொன்னார்.
எதிலில்டா நீங்க உண்மையாக நடந்திருக்கின்றீர்கள்? எல்லாமே தில்லு முள்ளு தானே– ஈன ஜென்மங்கள். இவனெல்லாம் பெரிய தலைவன்கள். வெங்காயம்.
“கடத்தலுக்கு பிணைப்பணம் கொடுப்பதை அரசாங்கம் ஆதரிப்பதில்லை” ஆகையால் பிணைப்பணத்தை இஸ்லாமிய கும்பலின் மேம்பாட்டுக்கென “நன்கொடை” என்று கொடுத்தால், அபுசாயாப் தீவிரவாத கும்பல் பிணையாளிகளை விடுவிப்பார்கள்.
நல்லா ரீல் விடுறீங்கடா !