‘சிலாங்கூர் அரசில் முறைகேடுகளை அம்பலப்படு்த்திய ரபிசிக்கு நன்றி’-ஜமால் யூனுஸ்

jamal yubosசுங்கை  புசார்  தொகுதி  அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ், பிகேஆரால்   வழிநடத்தப்படும்   சிலாங்கூர்  அரசில்  நிலவும்  முறைகேடுகளை  அம்பலப்படுத்திய  அக்கட்சியின்  தலைமைச்  செயலாளர்  ரபிசி  ரம்லிக்கு  நன்றி  தெரிவித்தார்.

முகம்மட்  அஸ்மின்  அலியை  மந்திரி  புசாராகக்  கொண்ட  சிலாங்கூர்   அரசில்  அதிகார  மீறல்களும்  ஊழலும்  நிலவுவது  ரபிசி  மலேசிய ஊழல்-தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)த்தில்  செய்துள்ள  புகாரின்வழி  தெரிய  வருகிறது  என்றாரவர்.

“ரபிசியின்  புகாரின்வழி  ஊழல்  விசாரணைக்கு  உதவியாக  எம்ஏசிசி  முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவரைத்  தடுத்து  வைத்திருப்பதாகவும்  தெரிகிறது”, என்று  ஜமால்  யூனுஸ்  கூறினார்.
கைது  செய்யப்பட்டிருப்பவர்  மந்திரி  புசாரின்  முக்கியமான  ஆள்களில்  ஒருவர்  என்பதால்  அஸ்மின்  அலிமீதும்  விரிவான  விசாரணை மேற்கொள்ளப்பட  வேண்டும்  என்றவர்  கேட்டுக் கொண்டார்.