சிலாங்கூர் அரசு, அதன் பணியாளர்களுக்கு நோன்புப் பெருநாளை யொட்டி 1.5மாத போனஸ் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஜூலை முதல் நாள் தொடங்கி போனஸ் வழங்கப்படும் என மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார்.
மாநிலத்தின் 17,528 அரசுப் பணியாளர்கள் அந்த போனசைப் பெறுவார்கள். இதற்காக மாநில அரசு ரிம45.6 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
இது தவிர அரசுப் பணியாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையிலும் அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் மேலும் இரு ஊக்குவிப்புகளையும் மந்திரி புசார் அறிவித்தார்.
“மாநில அரசு இவ்வாண்டு இரண்டு சம்பள உயர்வுகளை வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது”, என்றாரவர்.
வழக்கமான சம்பள உயர்வுடன் சிறப்பு சம்பள உயர்வையும் அவர்கள் பெறுவார்கள்.
“வீட்டு வசதி அலவன்ஸ் கிரேட் 41-க்கும் அதற்குக்கீழே உள்ள அதிகாரிகளுக்கும் ரிம180- இலிருந்து ரிம300 ஆகக் கூட்டப்படுகிறது”, என்று அஸ்மின் தெரிவித்தார்.