கேஎல்ஐஏ2 என்ற பெயரை மாற்ற இயலாது என்று கூறும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) நிர்வாக இயக்குனர் பாட்லிஷாம் ஜசாலி, அதை மாற்றுவது வான் போக்குவரத்துச் சட்டத்தை மீறுவதாகும் என்றார்.
கேஎல்ஐஏ2-இன் பெயரை எல்சிடிடி2 என்று மாற்ற வேண்டும் என்று ஏர் ஏசியா விமான நிறுவனம் நடத்திவரும் இயக்கம் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம்(ஐஏடிஏ) மற்றும் அனைத்துலக சிவில் வான்போக்குவரத்து நிறுவன விதிமுறைகளுக்கும் எதிரானது என்றாரவர்.
“ஒரு விமான முனையத்தின் பெயரை விருப்பம்போல் மாற்ற இயலாது. அது பதிவு செய்யப்பட்ட ஒரு பெயர். அதற்கு கேஎல்ஐஏ2 என்று பெயரிட்டது அரசாங்கம்தானே தவிர எம்ஏஎச்பி அல்ல”, என்றாரவர்.
அரசாங்கமே பேரை மாற்றவேண்டியது தானே?