அரசாங்கம்: அபு காசிம் சுய விருப்பத்தின்பேரில்தான் பணி விலகுகிறார்

kassimஅபு  காசிம்  முகம்மட்  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)  தலைமை  ஆணையர்  பதவியிலிருந்து  சுய  விருப்பத்தின்பேரிலேயே   ஆகஸ்ட்  1-இல்    விலகுகிறார்  என   அரசாங்கத்   தலைமைச்  செயலாளர்   அலி  ஹம்சா  கூறினார்.

ஒரு  மாத  அறிவிக்கை  கொடுத்து   பதவி  விலக  அவர்  செய்து  கொண்ட  விண்ணப்பத்தை  மாமன்னர்  மலேசிய  ஊழல்தடுப்புச்  சட்டம்  2009-இன்  துணைப்  பிரிவு 5(3)-இன்படி  ஏற்றுக்கொண்டார்.

ஆனாலும்  அவர்  2020, டிசம்பர்  6வரை-  அதுதான்  அவர்  பணிஓய்வு  பெறும்  அதிகாரப்பூர்வ  நாளாகும்- ஒரு  ஊழல்தடுப்பு  அதிகாரியாக  தொடர்ந்து  பணியாற்றுவார்  என  அலி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.