அரசியலில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து இழித்தும் பழித்தும் பேசுவோரைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடினார்.
அரசாங்க உதவி பெறுவோரை “pemakan dedak (விலங்குகளுக்கான தீனியைத் தின்பவர்)” என்று வருணித்து கொடுக்கப்படும் உதவியைக் கெடுக்கப் பார்க்கிறார்கள் என்றாரவர்.
பிரதமர் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ஆனாலும், தம் முன்னாள் அரசியல் குருவும் இந்நாள் அரசியல் எதிரியுமான டாக்டர் மகாதிர் முகமட்டை மனதில் வைத்துத்தான் அவர் அவ்வாறு கூறி இருக்க வேண்டும்.
“இந்தப் புனிதமான மாதத்தில் சில தரப்பினர் நயமற்றுப் பேசுகிறார்கள்.
“அரசாங்கம் மக்களின் துயர் தீர்க்கவே உதவிகளை வழங்குகிறது. ஆனால், அது தீனி போடுவதாகக் கொச்சைப்படுத்தப் படுகிறது”, என நஜிப் தம் முகநூல் பக்கத்தில் கூறினார்.
மாமா மகாதீர் “தீனி” என்றுதானே கூறினார், என்னமோ பிரதமர் தன்னுடைய “ஊழல் நன்கொடை”-யிலிருந்து மக்களுக்கு “உதவி நன்கொடை” கொடுக்கிறார் என்று கூறியதைபோல் பேசுகிறீர்கள்.
மடத்திமிர் தன் ஆதிக்கத்தை உயிர்ப்பிக்கும் வரை ஓயே மாட்டான்….
“அரசாங்கம் மக்களின் துயர் தீர்க்கவே உதவிகளை வழங்குகிறதா? ஐயோ, பாவம், சீனி, மாவு, அரிசிக்கு வழங்கிய உதவி தொகை நீக்கப்பட்டதால் மக்களுக்கு துயர் இல்லையா? அது எப்படி அந்த இரண்டு தொகுதி வாக்காளர்கள் மட்டுதான் நஜீப்புக்கு” மக்களாக ” தெரிகிறார்கள்?