இன்று நடைபெற்ற மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்ள சில ஊடகங்கள் தவிர்த்து பலவற்றுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆணையத்தின் அதிகாரிகள் செய்தியாளர் கூட்டம் ஒன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை.
“செய்தியாளர் கூட்டம் எதுவும் நடக்கவில்லை. குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கும் (எம்ஏசிசி தலைவர்) அபு காசிமுக்குமிடையில் ஒரு நேர்காணல் நடந்தது, அவ்வளவுதான்”, என அதிகாரிகள் மலேசியாகினியிடம் தெரிவித்தனர்.
முன்னதாக, இன்று நண்பகல் 12 மணிக்கு எம்ஏசிசி தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்று நடப்பதாக ஊடகங்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.