சிலாங்கூர் அரசிலிருந்து பாஸ் வெளியேறினால் அது கவிழ்ந்து விடும் என்று கூறப்படும் வேளையில் அப்படி எதுவும் நடக்காது என்று அடித்துக் கூறுகிறார் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி.
சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட், சிலாங்கூர் அரசுக்கு அந்த இஸ்லாமியக் கட்சியின் ஆதரவு தொடரும் என எழுத்துப்பூர்வமாகவே உறுதியளித்துள்ளார் என அஸ்மின் கூறியதாக ஓரியெண்டல் டெய்லி தெரிவித்துள்ளது.
“அமனா கடந்த ஆண்டில் அமைக்கப்பட்டதை அடுத்து நான் இஸ்கண்டரைச் சந்தித்தேன்”, என்றவர் அந்நாளேட்டில் இன்று வெளிவந்த ஒரு நேர்காணலில் கூறினார்.
“சிலாங்கூர் பாஸ் பக்கத்தான் ரக்யாட்டின் பொதுக் கொள்கைக் கட்டமைப்புக்கும் பக்கத்தான் ரக்யாட் பட்ஜெட் பரிந்துரைகள், புக்கு ஜிங்கா (தேர்தல் அறிக்கை) ஆகியவற்றுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என எழுத்து வடிவில் அவர் உறுதி அளித்தார்”, என்றாரவர்.
இஸ்கண்ட்ரின் உத்தரவாதம் தமக்கு நம்பிக்கை தந்திருப்பதாக அஸ்மின் கூறினார்.