-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜூன் 23, 2016.
அண்மையில், யுடிஎம் எனப்படும் மலேசிய தொழிநுட்ப பல்கலைக்கழகம் அதன் மாணவர்களுக்கு போதிக்கும் இஸ்லாமிய நாகரீகம் மற்றும் ஆசியா நாகரீகம் என்கின்ற பாடத்திட்டங்களின் உள்ளடக்கமாக இஸ்லாம் மதம் இந்தியவிற்கு வந்த பிறகு அங்குள்ள இந்துக்களுக்கு சுத்தத்தை கற்றுக்கொடுத்ததாகவும் ,அதற்கு முன்பு அங்கு வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்து மதம் சுத்தத்தை கடைபிடிக்க போதிக்கவில்லை என்று கூறியுள்ளது.
இந்து மதத்தை மட்டுமில்லாமல் சீக்கிய மதத்தையும் அப்பாடத்திட்டம் புண்படுத்தியுள்ளது. சீக்கிய மதம் இஸ்லாமிய மதக் கொள்கையை அதிகப்படியாக பின்பற்றியுள்ளது என்றும், அம்மதத்தை தோற்றுவித்தவர் இஸ்லாத்தில் அதிக புலமை இல்லாதவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது முதல் பல தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவரகளில் மலேசியாவிற்கான இந்திய தூதர் திருமூர்த்தியும் அடங்குவர். இதன் எதிரொலியாக அப்பல்கலைக்கழகம் மன்னிப்புக் கேட்டுகொண்டதுடன் இது குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக அதன் துணைவேந்தர் கூறியுள்ளார். இது போதாதென்பது எனது கருத்து. இது அரசியல் சம்பந்தப்பட்ட விசயமல்ல. மதம் சம்பந்தப்பட்டது. பல நாடுகளில் வாழுகின்ற இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இந்த பாடத்திட்டம் அமைந்துளதை கவனத்தில் கொள்வது அவசியம்.
வல்லரசு நாடான இந்தியா இவ்விசயத்தில் வாளாவிருப்பது ஏற்புடையதல்ல என்று நான் நினைக்கிறேன். புதுடில்லியிலுள்ள இந்தியாவிற்கான மலேசிய தூதர் உடனடியாக அழைக்கப்பட்டு இந்திய அரசின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படவேண்டும். இது மலேசியாவின் உள்நாட்டு விவகாரம் என்று சொல்லி இதனை கண்டிக்காமல் வாளா இருந்துவிடக்கூடாது
மற்ற நாடுகளில் உள்ள இந்து இயக்கங்களும் அந்தந்த நாடுகளில் உள்ள மலேசிய தூதர்களை அழைத்து அவர்களின் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவிக்க வேண்டும்.
5 ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றையுடைய ஒரு மதம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளான இஸ்லாம் மதத்தில் இருந்து சுத்தத்தை கற்றுக்கொண்டது என்பது ஆதரபூர்வமற்றதும் அறிவிற்கெட்டாத கூற்றாகும். இதை முன்வைத்த விரிவுரையாளர்களின் முட்டாள்தனத்தை இது மெய்பிக்கிறது. உலகின் மூத்த இரண்டு மொழிகளின் பிறப்பிடம் இந்தியா. உலகின் முதல் நாகரீகம் இந்தியாவில்தான் உருவானது என்பதை மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா போன்ற நாகரீகங்கள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கின்றன.
நாகரீகம் என்பது சுத்தத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகும் சமுதாயத்தின் உயர்நிலை விரிவாக்கமாகும். சுத்தத்தோடு கூடிய நாகரீகத்தின் உச்சியில் வாழ்ந்தவர்கள் இந்தியர்கள் என்பதான் உண்மை. அப்படிபட்டவர்கள் இஸ்லாம் மதம் இந்தியாவிற்கு வந்த பின்புதான் சுத்தம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்கள் என்று சொல்வது அப்பட்டமான பொய்யின் உச்சகட்டம்.
இது போன்ற அறிவற்ற கருத்துக்கள் மேலும் தோன்றாமலிருக்கவும் உலக இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்கவும் இந்து சமயத்தின் புனிதத்தை காக்கும் தார்மீக பொறுப்படைய இந்திய அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அக்கண்டனம் எந்த ஒரு நாடும் இனிமேல் இந்து மதம் பற்றிய தவறான தகவல்களை வெளியிட அஞ்சும் வகையில் இருத்தல் வேண்டும். மலேசியா கல்வி திட்டத்தில் புரையோடியிருக்கும் மூளைச்சலவை செய்யும் பாடத்திட்டங்களே இது போன்ற ஒரு தலைபட்சமான, உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வெளிவரக் காரணமாக இருக்கின்றன.
சுயமாக சிந்திக்க தெரியாத அரசியல் தலைவர்களைத் திருப்திப்படுத்த, பதவி உயர்வு பெறுவதையே முதன்மை இலக்காகக் கொண்ட கல்வியாளர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் வரை இந்நாட்டில் அறிவும் ஆற்றலும் மிக்க மனித மூலதனங்கள் வெளிவருவது என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்பதை இவர்களின் செயல் குறிக்கிறது.
“உங்கள் மதம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என்னும் திடமான கொள்கை கொண்ட மதம் இஸ்லாம். இந்த அடிப்படை உண்மையைக்கூட உணராத படிப்பாளிகள் எப்படி ஒரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றமுடியும்?
பல சமயங்கள் பின்பற்றப்படும் மலேசிய நாட்டில் ஒரு சமயத்தை முன்னிலைப்படுத்த வேண்டி இந்து சமயத்தை களங்கப்படுத்த நினைக்கும் இந்த யுடிஎம்மின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. அந்தப் பாடத்திட்டத்தை தயாரித்தவர்கள், அதனைச் சரி பார்த்தவர்கள், இறுதியாக அது மாணவர்களுக்கு போதிக்க ஏற்றதுதான் என்று தணிக்கை செய்து அதனைப் பாடமாக அங்கீகரித்தவர்கள் போன்ற அனைத்து தரப்பினரையும் அவரவர் பதவியில் இருந்தது தூக்கியெறிய வேண்டும். அது அவர்களைப் போன்றவர்களுக்குப் பாடமாக அமையும்.
ஐயா குலா அவர்களே –இந்தியா ஓரு கையால் ஆகாத வெத்து வேட்டு
பிரவாசி மாநாட்டில் இந்திய பிரதமரிடம் தெரியபடுத்துங்கள் . அதைவிடுத்து இங்கே என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
அரை குறையாய் படிச்சவனுக்கெல்லாம் பதவி கொடுத்து வேலைக்கு வெச்சுக்கிடடா இப்படித்தான் சரித்திரம் அறியாமல் கேனத் தனமாக பேசுவானுக அல்லது எழுத்துவானுங்க.நாய் வாலை நிமிர்த்த முடியாது ஐயா.
குள்ள நரி இந்தியா தலையிட வேண்டுமா.? பக்கத்தில் இருக்கிறது இலங்கை.அங்கு தமிழீழ மண்ணில் இந்து கோவில்களை அழித்து புத்த விகாரங்களை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நட்டுக்கொண்டு வருகிறான் சிங்களவன்.அவனையே தட்டிக் கேட்க திராணி இல்லாத இந்த இந்தியாவா இந்த விஷயத்தில் தலையிடும்.ஊஹூம்…. வாய்ப்பே இல்லை.
இந்தியா ?.அந்த அளவிற்கு தைரியம் இருக்கா இந்தியாவிற்கு.
இஸ்லாமிய மதத்தை இழிவு செய்தால் உடனடியாக
சட்டம் தன் கடமையை செய்யும். மற்ற மதங்களை இழிவு படுத்தினால் மன்னிப்பு கேட்டால் போதும். ஏன் இந்த பாகுபாடு
இந்நாட்டின் இந்தியர்களை பிரதிநிதிக்கும் BN-னின் பங்காளி எருமையான MIC எருமைகளே “இந்துக்களை அவமதிப்பது இந்நாட்டில் இதென்ன முதல் முறையா” என BN-னின் குட்டைக்குள் மூழ்கி கிடக்கும்போது, இந்தியாவிற்கான மலேசிய தூதர் உடனடியாக அழைக்கப்பட்டு இந்திய அரசின் சார்பில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா ?
High Commission of India
Kuala Lumpur
Press Release
1. We have seen news reports of the incident relating to derogatory portrayal of Hindus and Sikhs in India during a presentation at the Universiti Teknologi Malaysia (UTM).
2. We are concerned at negative and incorrect picture being conveyed about Hinduism and Sikhism. Hinduism and Sikhism are two great religions which India has given birth to.
3. We note that the Hon’ble Minister of Health of Malaysia, the Hon’ble Deputy Minister of Education of Malaysia and others have condemned this incident. We also note the “utmost regret and deep remorse” conveyed by the Universiti Teknologi Malaysia on this incident and their assurance that such incident will not recur.
15th June, 2016
Kuala Lumpur
இந்தியா தேவை இல்லை இங்கு உள்ள இந்தியர்கள் ஒன்று பட்டாலே போதும் !! ஆளுக்கு ஒரு கட்சி !! ஆளுக்கு ஒரு மதம் !! ஆளுக்கு ஒரு ஜாதி !! ஒரு ஜாதிக்கு ஒரு சாமி !! ஒரு தெருவுக்கு பத்து கோவில் !! எவனையா மதிப்பான் நம்மை !! அவன் கட்சி வேறாக இருந்தாலும் மதம் என்று வரும் போது ஒன்று சேர்ந்து விடுவான் !! நாளையே ஆளும் கட்சி இந்திய புரட்சி தலைவர்கள் !! தானை தலைவர் வலி வந்தவர்கள் !! குலசேகரன் யார் இந்து மதத்தை பட்றி பேச என்று வழக்கு தொடுப்பார்கள் அல்லது அறிக்கை விடுவார்கள் !!
ஐயா ஸ்ரீஹர முதல்வன் அவர்களே – அது என்ன அறிக்கை? வெங்காய அறிக்கை-சுத்த முதுகு எலும்பில்லா ஈன ஜென்மங்கள். அவன்களின் மதத்தை பற்றி அப்படி சொல்லி இருந்தால் இந்நேரம் ஒரு பெரிய வெட்டு கத்தியை காண்பித்து ஒரு கூத்தே நடந்திருக்கும். என்ன செய்வது சுண்டக்காய் சிங்களவன் பண்ணும் அநியாயத்தையே கேட்க திறன் இல்லா ஜென்மம்..
தமிழ் நாட்டில் ஆளும் காட்சியிலும் எதிர் காட்சியிலும் தமிழர்களாக இருந்தால் அவர்களுக்கு சொரணை இருக்கும் வடுக வந்தேறிகளுக்கு என்ன அவசியம் வேண்டிஉள்ளது ?தமிழ் நாட்டு மக்கள் ஆந்திரக்காரனிடம் சிக்கி சித்திரவதை படுவதையே அவர்கள் கண்டுக்கொள்வதில்லை அவர்கள் குறிக்கோள் பதவி வெறி ,ஜாதி வெறி தமிழன் தன் தலைவிதியை தானே எழுதிக் கொண்டான் !!
தமிழ்நாட்டின் வரலாற்று கல்வியிலே தமிழர் வரலாறு இல்ல !
தமிழகத்தில் ஒரு ஈனக்கூட்டிடம் (தமிழ் இனக்குழு ) தெலுங்கர்களுக்கு சோழர்காலத்திலிருந்தே அருவருடியாக தாங்களும் தங்கள் சாதியும் சுயநலமாக தமிழ் இனத்துக்கே சாபக்கேடு …
பள்ளி பாட நூல்களில் தமிழருடைய வரலாறே இல்லை அதற்கு பதிலாக அசோகன் மரத்த நட்ட கதையும்,
மராட்டிய சிவாசி படையெடுத்த கதையையும்,
முகமதிய படையெடுப்பு,ஐரோப்பிய காலனி ஆதிக்கம்,
1900 காலக்கட்டத்தில் நடந்த சமுதாய புர்ச்சி போக நெப்போலியன் படையெடுப்பு போன்றவையே நிறைந்துள்ளது,
உலகையே கட்டியாண்ட பாண்டிய,சோழ,சேர மன்னர்களின் வரலாறு உப்புக்கூட பாட நூல்களில் இல்லை என சகோ வடிவேல் சுப்ரமணியம் பதிவிட்டிருந்தார்,
உண்மைதான் ஆனால் தமிழரசர்களின் வரலாறை சொல்லப்போனா அவர்கள் வென்ற வரலாற்றையும் வீழ்ந்த வரலாற்றையும் சொல்லனும்ல???
வென்ற வரலாறை சொல்வதில் பிரச்சனையிருக்காது ஆனால் வீழ்ந்த வரலாற்றை பதியனும்னா எங்கு எப்போது வீழ்ந்தனர்,
அவர்களை வீழ்த்தியது யார்??? வீழ்த்திய முறை எப்படி என்ற வரலாற்றையும் எழுதனும்ல???
எழுதவேண்டியது தானே அதனால் என்ன வந்திருக்கு என்று கேட்பீர்களானால்???
அதெப்படி எழுத முடியும் வீழ்த்திய வடுக எச்சங்களின் மிச்சங்கள் கையில் தானே தமிழ்நாட்டு அரசியல் ஆளுமை இருக்கு???
தன்னினத்தான் தமிழினத்தை வீழ்த்திய வரலாறை இம்மிச்சங்களுக்கு வெளிப்படுத்த மனசு வருமோ???
அதுபோக தமிழன் தன்னுடைய வரலாறை அறிய நேரிட்டால் இன்று கட்டமைக்கப்பட்டுள்ள ஆரியநாடு-தீராவிட நாட்டு பிம்பம் சுக்குநூறாக வெடித்து சிதறுமே???
அதனால் வாழ்ந்துக்கொண்டிருக்கும் தலைமுறை மட்டுமல்லாது வாழப்போகும் தலைமுறையும் தன்னின வரலாறை அறிந்துக்கொள்ள விடக்கூடாது என்பதில் முழுக்குறிக்கோளுடன் இயங்குவர் பிராமணீய வல்லூறுக்களும் அதன் செல்லக்கிளிகளான தீராவிடக்கிளிகளும்…
தமிழர்கள் சீக்கியர்கள்போன்று தனித்துவத்தோடு சமயநெறியில் இயங்கவேண்டும் …வடுகாரிய சாக்கடை ஒருபோதும் தமிழர்களுக்கு உயர்வைத்தராது … மூடப்பழக்கமும் சக்கம்மா குறிசொல்லும் ஈனப்பயல்களிடமிருந்து சற்று ஒதுங்கி இருக்கவேண்டும் ..
இந்தியமண்ணில் இன்றய ஆரிய ஆட்ச்சி ஆரியர்களுக்கும் அவர்களின் சூத்திர அருவருடிகளுக்குமானது .. ஆர் எஸ் எஸ், பி ஜெ பி போன்ற நிகழ்வுகளில் முழுக்க முழுக்க ஆரிய அடையாளங்களும் அவர்கள் சார்ந்த சாமியார்களின் வரலாறுகள்தான் இருக்கும் …
ரிசிக்கலின் புகழ் விளம்பரப்படுத்தப்படும் !தமிழ் சித்தர்களின் வரலாற்றை கடுகளவேனும் இருக்காது .. தமிழகத்தில் தமிழை ஆடசிமொழியாக மாற்ற முட்டுகடடைபோடுபவர்கள் வடுக தெலுங்கர்கள் ..தமிழ் ஆடசிமொழியானால் தங்கள் பொழப்புக்கு குந்தகம் விளைந்திடும் என்று அன்சுகிறார்கள்… கன்னட தெலுங்கச்சிக்கு ஆலோசகர்கள் இருந்து தலைமை செயலாளர் வரைக்கும் தெலுங்கர்கள் !
en thaai thamizh !
“அவன்களின் மதத்தை பற்றி அப்படி சொல்லி இருந்தால் இந்நேரம் ஒரு பெரிய வெட்டு கத்தியை காண்பித்து ஒரு கூத்தே நடந்திருக்கும்…..”
இந்துக்களை இழித்துரைத்திற்குதான் நமது இந்திய MIC எருமைகள் BN-னின் குட்டைக்குள் மூழ்கி கிடக்கிறது என்று கூறி விட்டேனே. நமது நாட்டு இந்திய எருமைகளே அடக்கி வாசிக்கும்போது (இதில் எதிர்க்கட்சிகள் விதிவிலக்கல்ல) இந்தியா மட்டுமல்ல வேறு எந்த நாடாக இருந்தாலும் மேலோட்டமாகத்தான் கண்டனம் தெரிவிக்க முடியும்.
இந்த விவகாரத்தில் நமது நாட்டின் எந்த இந்திய அரசியல் கட்சி தலைவர்ககளும் (BN-னின் பங்காளி கட்சி மற்றும் எதிர்கட்சி தலைவர்கள்) “கடும் கண்டனம்” தெரிவித்தாக தெரியவில்லையே. அனைவரும் மேலோட்டமாகத்தானே கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
உலக இந்துக்களை அவமதித்த யுடிஎம்மிற்கு இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்க வேண்டும் !