மலாய்க்காரர்கள் தங்களுக்கு அடித்துக்கொள்ளும் வேளையில் சீனர்கள் வெற்றி பெறுவார்களே என்ற கவலை டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு இல்லை என்று கடிந்து கொண்டிருக்கிறார் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) ஆலோசனை வாரியத் தலைவர் துங்கு அப்துல் அசீஸ் துங்கு இப்ராகிம்.
ஏனென்றால், அவரது இதயம் “கல்லாகி விட்டது”. சொந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்யத் தயாராகி விட்டார் என்றவர் சாடினார்.
மகாதிர் நடப்பு ஆட்சிக்குத் தொல்லை கொடுத்து வருவதைச் சுட்டிக் காட்டிய துங்கு அசீஸ், அவர் “இரண்டாவது பிரதமர்”போன்று நடந்து கொள்கிறார் என்றார்.
மற்ற உலகத் தலைவர்கள் பணி முடிந்து விலகியதும் குடும்பத்துக்காக நேரத்தைச் செலவிடுகிறார்கள், விரிவுரை ஆற்றுகிறார்கள், பின்னணியில் இருந்துகொண்டு தத்தம் அரசாங்கங்களுக்கு உதவுகிறார்கள்.
ஆனால், மகாதிர் அதைச் செய்வதில்லை.
“(முன்னாள்) அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனைப் பாருங்கள். பணிஓய்வுக்குப் பின்னர் பேச்சாளராக அழைக்கப்படுகிறார், எழுதுகிறார், இப்போது அதிபர் தேர்தலில் தம் துணைவியாருக்கு உதவியாக இருக்கிறார்.
“நமக்கு மிக நெருக்கமான தெற்கத்தி அண்டைநாடான சிங்கப்பூரில் காலஞ்சென்ற லீ குவான் இயு மகாதிரைவிட நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்….பின்னர் மூத்த அமைச்சரானார்.
“அவர் எப்போதாவது மகாதிர்போல் நடந்து கொண்டதை மலேசியர்கள் பார்த்ததுண்டா?”, என துங்கு அசீஸ் வினவியதாக உத்துசான் ஆன்லைன் கூறிற்று.
“2003-இல் அவர் பதவியை அப்துல்லா படாவியிடம் ஒப்படைத்து இப்போது 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவருக்குப் பின்வந்த பிரதமர்களுக்குத் தொந்திரவு கொடுப்பதை நிறுத்தவில்லை”, என்றாரவர்.
மகாதிர் டிஏபி-யுடனும் பார்டி அமனா நெகாராவுடனும் ஒத்துழைப்பது மலாய்க்காரர்களுக்குக் கேடாக முடியும் என முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் எச்சரிப்பது பற்றிக் கருத்துரைத்தபோது துங்கு அசீஸ் இவ்வாறு கூறினார்.
அனைத்திற்கும் அயல் நாட்டு தலைவர்களை எடுத்துக்காட்டாக சுட்டி காட்டும் வேளையில், ஊழல்/அதிகார துஷ்பிரயோங்களுக்காக அயல் நாட்டில் தலைவர்கள் ராஜினாமா/தற்கொலை புரிந்து கொள்வதை மட்டும் எடுத்துக்காட்டாக சுட்டி காட்ட மறந்து விடுகிறீர்கள்.
காலஞ்சென்ற லீ குவான் இயு மகாதிர்போல் நடந்து கொள்ள வில்லை ஏனென்றால் சிங்கப்பூரில் அவருக்கு பின் பிரதமரானவர் நம் பிரதமரை போல் அயல் நாட்டினரிடம் பிச்சை SORRY நன்கொடை வாங்க வில்லையே !
யார் வெற்றிபெற்றால் என்ன? நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும்
இவனுக்கே இப்படிப்பட்ட கீழ்த்தர எண்ணமிருந்தால் மற்றவர்களை பற்றி என்ன சொல்ல முடியும்?
நீயே ஒரு கேடு , நீ மகாதீரை விமர்சிக்க அருகதை இல்லை , நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் , உனக்கு சிந்திக்க அறிவில்லையா? சீனன் ,தமிழன் வானத்திலிருந்தா ? வந்தான் . ஏன் என்ன தப்பு செய்தீர்கள் எங்களை கண்டு பயப்படுவதற்கு ? உனக்கு வக்கில்லை என்றால் nee போய் உன் குடும்பதோடு செலவிடு சம்பாதித்ததை .
இந்த துங்கு அஸீஸ், எங்கே ‘சீனி’ உள்ளதோ, அங்கே மொய்க்கும் எறும்பை போன்றவர். இவரை நான் நன்கறிவேன். டி ஏ.பி. யில் வேவு பார்க்க இவர் அக்கட்சினுள் நுழைந்தார். ஏமாந்துபோன டி. ஏ. பி. இவரின் பொய்யான விசுவாசத்தை நம்பி, அருகதை உள்ளவர்கள் பலர் இருக்க, இவருக்கு செனட்டர் பதவி கொடுத்தது. சிறிது நாளில் டி.ஏ.பி. க்கு அல்வா கொடுத்து, நடையை காட்டினார்.
ஆமாம்– இந்த 5 ம் படைகளை நம்ப முடியாது–காற்று வீசும் இடங்களில் எல்லாம் பார்க்க முடியும்– இப்போது முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லவும் அதிகாரபூர்வமாக பகாங் முஃடீ கூறுகிறான்– இதுதான் இவன்களின் ஈன எண்ணங்கள் –MIC MCA சப்பிக்கொண்டே இருங்கடா.