கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகைதின் யாசினையும் முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரையும் விலக்கும் கட்சி உச்சமன்றத்தின் முடிவை ஏற்பதாக ஜோகூர் அம்னோ அறிவித்துள்ளது.
அம்முடிவு நியாயமானது என ஜோகூர் அம்னோ நம்புவதாக ஜோகூர் மந்திரி புசார் காலிட் நோர்டின் தெரிவித்தார் என பெர்னாமா கூறியது.
நேற்றிரவு, அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக், அவ்விருவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகவும் உதவித் தலைவர் முகம்மட் ஷாபி அப்டால் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.
JOHOR, KEDAH வீழ்ந்தவர்கள் பட்டியலில் எப்படியும் PERAK-கையும் இணைத்து விடுவார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் மக்களை ஏமாற்றி விடாதீர்கள்.