கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகைதின் யாசினையும் முன்னாள் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரையும் கட்சிநீக்கம் செய்யும் அம்னோ உச்ச மன்ற முடிவை பெர்லிஸ் அம்னோ முழுமையாக ஆதரிக்கிறது.
உச்ச மன்றம் கடந்த வியாழக்கிழமை உதவித் தலைவர் ஷாபி அப்டாலையும் இடைநீக்கம் செய்தது.
பெர்லிஸ் அம்னோ தலைவர் ஷகிடான் காசிம் “முகைதினும் முக்ரிசும் கோலா கங்சார், சுங்கை புசார் இடைத் தேர்தல்களில் எதிரணியினரின் பரப்புரைக்கு உதவினார்கள்” என்பதால் பெர்லிஸ் அம்னோ உச்ச மன்றத்தின் முடிவை ஆதரிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாகக் கூறினார்.