முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தலைமையில் செயல்படும் பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளை அரசாங்கம் அதற்குப் பண உதவி செய்திருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறது.
அறக்கட்டளையில் அமைந்துள்ள டாக்டர் மகாதிர் முகம்மட்டின் அலுவலகத்துக்கான வாடகைப் பணத்தை மட்டும் அரசாங்கம் கொடுப்பதாக அது நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது/
அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அந்த அறக்கட்டளைக்கு அரசாங்கத்தின் பண உதவி நிறுத்தப்பட வேண்டும் என்று அம்னோ உச்ச மன்றம் முடிவெடுத்திருப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்ததற்கு அறக்கட்டளை இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
அரசாங்கம் முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளுக்கான சம்பளத்தையும் கொடுக்கிறது.
மற்றபடி, அறக்கட்டளையை நடத்துவதற்கான செலவுகளையோ அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் பணியாளர்களின் சம்பளத்தையோ அரசாங்கம் கொடுப்பதில்லை என்று அது கூறிற்று.
மாமா மகாதீரே !
உண்மையான வாடகை எவ்வளவு ?
அரசாங்கம் கணக்கில் காட்டப்படும் வாடகை தொகை எவ்வளவு ? என்பதை கூற மறந்து விட்டீர்களே.
உண்மையான வாடகையைவிட அரசாங்கத்திடம் அதிகமான வாடகையை பெறுகிறார் முன்னாள் பிரதமர் என்று இந்நாள் பிரதமர் உங்கள்மேல் குற்றம் சுமத்த நீங்களே வழி காட்டுகிறீர்கள்.
அப்புறம் என்ன? வாடகையும் நிறுத்தி விடுகிறோம்! போதுமா?