முக்ரிஸ் மகாதிரின் ரசிகர் மன்றம் அதன் முகநூல் பக்கத்தில் ஒரு புதிய கட்சி அமைப்பது பற்றி இணையத்தில் ஓர் ஆய்வைத் தொடங்கியுள்ளது.
அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த முன்னாள் கெடா மந்திரி புசாரும் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவரான முகைதினும் இடைநீக்கம் செய்யப்பட்ட அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் ஷாபி அப்டாலுடன் சேர்ந்து “ஒரு புதிய அரசியல் தள”த்தை உருவாக்கிக் கொள்வது பற்றிப் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை அடுத்து அம்மன்றம் இந்த ஆய்வைத் தொடங்கியுள்ளது.
அது அதன் ஆதரவாளர்களிடம் ‘3எம்ககள்’(முகைதின் -முக்ரிஸ்- முகமட் ஷாபி) புதிய கட்சி அமைப்பதை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறது.
இன்று காலை மணி 11.40வரை 629 பேர் அதற்கு மறுமொழி இட்டிருந்தனர். சிலர் “ஆம்” என்றார்கள். வேறு சிலர் “இல்லை” என்றார்கள்.
PARTI “BUNGA RAYA” என்று தொடங்கினால் அனைத்து மலேசியர்களுக்கும் நன்கு அறிமுகமான பெயராக இருக்கும் அதேவேளை தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் நம் மலேசிய நோட்டுக்களில் உள்ள “BUNGA RAYA” படத்தை காட்டி அதற்கே வாக்களியுங்கள் கேட்டு கொள்ளவும், வாக்காளர்கள் மறந்து விடாமல் இருக்க அந்நோட்டுக்களை மக்களே வைத்து கொள்ளுங்கள் என கூறி போஸ்டர் தயாரிக்கும் தேர்தல் செலவுகளை மிச்ச படுத்தலாம்.