இன்று அதிகாலை மிலான் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தீப் பற்றிக் கொண்டதால் அது மீண்டும் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்துக்கே திரும்பியது. விமானத்தில் இருந்த பயணிகள் எவரும் காயமடைவில்லை என விமான நிறுவன, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த சியா விமானம் அதிகாலை மணி 2.05க்கு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் விமானத்தின் இயந்திரப் பகுதி தீப் பற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட விமானி விமானத்தைத் திரும்பவும் சாங்கி விமான நிலையத்துக்கே கொண்டு வந்தார். அங்கு தீ அணைக்கப்பட்டது.
விமானத்தில் 222 பயணிகளும் 19 பணியாளர்களும் இருந்தனர். எவரும் காயமடையவில்லை.