அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட தொழிற்சங்கங்கள், என்ஜிஓ-கள், பல்வேறு சங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு மாபெரும் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்தை பிஎஸ்எம் மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.அருட்செல்வன் முன்வைத்திருக்கிறார்.
இல்லையேல், நடப்பு நிலவரம் தொடரும் பட்சத்தில் அடுத்த தேர்தலில் அனைவருக்கும் தோல்வி நிச்சயம் என்றவர் எச்சரித்தார்.
நேற்றிரவு ‘அமனா: வரமா அல்லது சாபமா?’ என்ற கருத்தரங்கில் தாம் முன்வைத்த அக்கருத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோது அருட்செல்வன் இவ்வாறு கூறினார்.
அக்கருத்தரங்கில் அவர் அமனா பிரச்னை அல்லவென்றும் ஒட்டுமொத்த பக்கத்தான் ஹராபான்தான் பிரச்னை என்றும் கூறினார்,
இப்படித்தான் ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லி கொண்டிருக்கிறீர்கள் ஆனால் தேர்தல் முடியுமுன்னே ஆளுக்கொரு தெருவாக பார்த்து நடையை கட்டி விடுகிறீர்கள்.
ஐயா அருட்செல்வன் அவர்களே– ஒன்றும் நடக்காது– இன,மதம் பணம் பண்ணும் அதிசயம் அடுத்த தேர்தலில் புரியும்–
இவர் ஒரு மின்வெட்டு மாதிரி திடீர் என்று தோன்றி காணாமல் போய்விடுவார் .
சினிமாலே எதிர்கட்சிங்க சண்டை போட்டுக்குவாங்க….அரசியலே ஆளுங்கட்சியுடன் பேரம் பேசி மக்களை மொட்டை அடிக்கிறதுதான் தொழில் தர்மம்ன்னு அண்ணன் சொல்ல வராரு…