மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), ஒரு விமான நிறுவனம் அதன் பணியாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளப் பாக்கியை ஹரி ராயாவுக்கு முன்பே கொடுத்தாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
சுமார் 300 பணியாளர்கள் கடந்த மூன்று மாதங்களாக தங்களுக்கான சம்பளமும் ஆறு மாதங்களாக அலவன்சுகளும் கொடுக்கப்படாமல் இருப்பதாகக் கூறினார்கள்.
அது மட்டுமல்ல. தங்கள் சம்பளத்தில் ஊழியர் சேமநிதி(இபிஎப்)க்கும் சமூகப் பாதுகாப்பு நிறுவனத்துக்கும்(சொக்சோ) சந்தா பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவும் ஆனால் கடந்த ஆண்டிலிருந்து அவை இபிஎப்-புக்கோ சொக்சோவுக்கோ அனுப்பப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“இது நம்பிக்கை மோசடியையும் பொறுப்பின்மையையும் காட்டுகிறது”, என எம்டியுசி தலைவர் அப்துல்லா சனி அப்துல் ஹமிட் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
தமிழ் உயர பிறந்ததால் வந்த பிரச்சனையா ?
லாபமே இல்லாத ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு லாபம் மட்டுமே பார்க்கும் ஊழியர்கள்.நீங்கள் மட்டும் தான்!
எந்த விம்மான நிறுவனம்? அம்னோ விமான நிறுவனம்– ஊழல் விமான நிறுவனம்– தரமில்லா நிர்வாகம் -அரைவேக்காடு தலைகள் – எல்லாமே மலாய்க்காரன் மயம்- திறமை உள்ள மலாய்க்காரன் அல்லாதவர்களுக்கு சந்தர்ப்பம் கிடையாது. 70 களில் இருந்த நிலை என்ன? தூக்கிவிடப்பட்ட மலாய்க்காரர்கள் எந்த அளவுக்கு திறமையுடன் செய்யப்பட்டார்கள்– பதவி மோகம் அதிகார வெறி -எப்படி முன்னேறுவது?