பில் காயோங் கொலை தொடர்பில் ஐவர் கைது

billஜூன்  21-இல், பிகேஆரின்  மீரி  கிளை  செயலாளர்  பில்  காயோங்  லூத்தோங்கில்  கொலையுண்ட  சம்பவம்  தொடர்பில்  போலீசார்  ஐவரைச்  சந்தேகத்தின்பேரில்  கைது  செய்துள்ளனர்.

22க்கும்  41வயதுக்குமிடைப்பட்ட  அவர்களில்  நால்வர்  ஆண்கள்,  ஒருவர்  பெண். அந்த  ஐவரும்  நேற்றிரவும்  இன்று  காலையும்  செய்யப்பட்டதாக  சரவாக்  சிஐடி  தலைவர்  எஸ்ஏசி  தேவ்  குமார்  கூறினார்.

“விசாரணைக்காக  அவர்கள்  7  நாள்களுக்குத்  தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர்”,  என்றாரவர்.