பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கைது செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டிருப்பது டிஏபி-இல் ஒரு நெருக்கடியை உருவாக்குவதோடு அடுத்த பொதுத் தேர்தலில் எதிரணியின் வெற்றி வாய்ப்பையும் கெடுக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
ஏனென்றால், டிஏபி தலைமைச் செயலாளர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் அவரால் கட்சிக்குத் தலைமையேற்று தேர்தலில் போட்டியிட இயலாது என்றவர்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தனர்.
ஏற்கனவே, எதிரணி பக்கத்தான் ரக்யாட் கடந்த ஆண்டு உடைந்ததாலும் அன்வார் இப்ராகிம் குற்றவாளிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதாலும் புண்பட்டுக் கிடக்கிறது.. இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று லிம் சிறைக்கு அனுப்பப்படும் ஒரு சூழலும் உருவாகி வருகிறது என்றவர்கள் எச்சரித்தனர்.
“லிம் ஐந்தாண்டுகளுக்குத் தேர்தலில் போட்டிபோட முடியாமல் போனால் அது அவரையும் கட்சியையும் பாதிக்கும். ஏனென்றால் அவரால் அரசாங்கத்தில் அல்லது கட்சியில் பதவி வகிக்க முடியாது”, என அரசியல் விமர்சகர் தாங் ஆ சாய் கூறினார்.
அதன் விளைவாக டிஏபி தலைமைத்துவத்தில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அது அவ்வளவு எளிதாக இராது. ஏனென்றால், லிம் மக்களையும் கட்சியினரையும் ஒருங்கே கவரக்கூடிய கவர்ச்சித் தலைவராக விளங்கியவர்.
“ஒரு தலைவர் இல்லை என்கிறபோதுதான் அவரது இழப்பை உணர்வோம். அன்வாரைப் போலத்தான். அவர் சிறைக்குச் சென்ற பின்னர்தானே அவர் இருந்திருந்தால் எதிரணி ஒற்றுமையைப் பாதுகாத்திருப்பார் என்பதை உணர்ந்தோம்”, என்றாரவர்.
ஆனாலும் எதிரணிக்கு முழு இழப்பு என்றும் சொல்லிவிட முடியாது. இவ்வழக்கே, சட்டத்துறைத் தலைவர் அலுவலகமும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமும் நடந்து கொண்ட விதத்தை மக்கள் மதிப்பிட ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்றும் அவர் சொன்னார்.
“ரிம2.6 பில்லியன் விவகாரத்தில் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை ஆனால் இந்த வழக்கில் மட்டும் விரைந்து செயல்பட்டது ஏன் என்ற சந்தேகம் மக்களுக்கு வரலாம்”, என்றார்.
இது, அடுத்த பொதுத் தேர்தலில் எதிரணிக்கு அனுதாப வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடும் என்றார்.
எவ்வாறாயினும் பினாங்கில் பக்கத்தான் ஹராபானே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடும் என்று தாங் குறிப்பிட்டார். ஆனால், தேசிய அளவில் அவருக்கு அந்த நம்பிக்கை இல்லை. ஏனென்றால், அங்கு பல்முனைப் போட்டி நிலவும் என்கிறார்.
இதனிடையே, இன்னொரு அரசியல் ஆய்வாளரான பூன் விங் கியோங், பிஎன் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிரணியைப் போட்டுத்தாக்க மேலும் ஓர் ஆயுதமாக லிம்மின் வழக்கு வந்து வாய்த்துள்ளது என்றார்.
“பிஎன் இந்த வழக்கை வைத்து டிஏபி மற்றும் லிம்மின் பெயரைக் கெடுக்க முனையும். டிஏபி 1எம்டிபி ஊழல் பற்றியே பேசுகிறதல்லவா. இப்போது பிஎன் இதைப் பயன்படுத்திக் கொள்ளும்”, என்றார்.
லிம்மீதான ஊழல் குற்றச்சாட்டை ஊதிப் பெரிதாக்கி 1எம்டிபி விவகாரத்தையே மற்றகடிக்கவும் பிஎன் முயலலாம்.
இந்த வழக்கு எதிரணிக்குக் களங்கம் கற்பிக்க பிஎன் வகுத்துள்ள வியூகத்தில் ஒரு பகுதி. இது யதார்த்தமாக நடந்த ஒன்றல்ல.
லிம்முக்கு முன்பே அன்வார்மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதன் விளைவாக பக்கத்தான் ரக்யாட் உடைந்தது நினைவிருக்கலாம்.
இது, நஜிப் தம் எதிரிகளத் தனித்தனியாகவும் விரைவாகவும் ஒழித்துக்கட்ட விரும்புகிறார் என்பதைக் காண்பிக்கிறது.
“சரவாக் மாநிலத் தேர்தல்களிலும் இரட்டை இடைத் தேர்தல்களிலும் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து தமக்குச் சாதகமான சூழல் நிலவுவதை உணர்ந்து எதிரணியை எதிர்கொள்ள அவர் முடிவு செய்து விட்டார்”, என்றாரவர்.
இன்னொரு கல்வியாளர், லிம் இல்லாத டிஏபி பிகேஆர் போல் ஆகிவிடும் என்று எச்சரிக்கிறார். அன்வார் சிறை சென்றதும் பிகேஆரில் மூண்டதுபோன்ற சர்ச்சைகள் டிஏபி-இலும் மூளலாம் என்று மலேசிய பேராசிரியர் மன்ற அரசியல், பாதுகாப்பு, அனைத்துலக விவகாரப் பிரிவுத் தலைவர் முகம்மட் முஸ்டபா இஷாக் கூறினார்.
டிஏபி நிலைமையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தவறினால் பிகேஆரில் ஏற்பட்ட நிலைதான் ஏற்படும்.
“அன்வார் இல்லாத பிகேஆர் பலவீனமடைந்துள்ளது.
“டிஏபியும் பினாங்கு மாநில அரசும் மாநில நிர்வாகமும் கட்சிப் பணிகளும் சீராக நடப்பதை உறுதிப்படுத்த வேண்ம்”, என்றாரவர்.
லிம், வழக்கில் முழுக் கவனம் செலுத்த விடுப்பில் செல்வதுகூட நல்லது என்று அவர் ஆலோசனை கூறினார். நீதிமன்ற வழக்கையும் மாநில அரசுப் பணிகளையும் போட்டு உழப்பிக் கொண்டிருக்கக் கூடாது.
இதனால் அவர்மீதுள்ள நம்பிக்கை உயரும்.
ஒருங்கிணப்பு இல்லை என்பதுதான் எதிரணியின் பிரச்னை என்று குறிப்பிட்ட முஸ்டபா, லிம்மின் வழக்கை “அரசியல் நோக்கம் கொண்டது” என்று சொல்வது நியாயமல்ல என்றார்.
அப்படி இல்லை என்கின்றார் வேறொரு அரசியல் ஆய்வாளர் . குவான் எங் மேலும் பிரபலமாயிட்டார்.அரசாங்கம் ஒரு நாள் அவரை கைது செய்து அடைத்த முறை மற்றும் அவருக்கு எதிரான குற்றச்சாற்று ,குவான் எங்கின் செல்வாக்கு மேலும் கூடிவிட்டது என்கின்றார்.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் எவரானலும் தண்டனைக்கு உட்பட்டவரே. லிமும் டி.ஏபிகட்சியும், அடுத்த தேர்தல் பற்றி இப்பொழுது சிந்திக்க கூடாது. இதனை முன்பே சிந்தித்து எடுத்திருக்க வேண்டிய ஒன்று. நாய் வாலை நிமித்த முடியாது. அதுபோல் தான் இதுவும், அவர் வீடு வாங்கிய இடத்தில் ஒரு சதுர அடி நிலம் ஆயிரம் வெள்ளிகள் என்பதை ஏற்கனவே இங்கு நான் குறிப்பிட்டுள்ளேன்,. ஆக வீட்டை அடிமாட்டு விலைக்கு விற்க வீட்டுக்காரனும் முட்டாளில்லை. மக்களும் முட்டாளில்லை. பாரிசான் இப்பொழுது அம்பலப் படுத்தாமல், அடுத்த தேர்தலுக்கு முன் இன்னும் அதிக ஆதாரத்துடன் வெளிப்படுத்தி இருந்தால் அப்பவும் அது பாதகமே! மக்களுக்கு வேண்டியது ஊழல் அற்ற ஆட்சி, அதனை வழங்க தவறியதே பெரிய துரோகம், எவர் வழங்கினாலும் மக்களுக்கு நல்லது.
இக்கட்டுரையை படைத்திருப்பவர்கள் அரசியல் அரைவேக்காடுகள் போல் தோன்றுகிறது. லிம் குவான் எங்கிற்கு கட்சி வட்டாரங்களில் அவ்வளவு செல்வாக்கில்லை. லிம்மைவிட திறமையானவர்கள் டி.ஏ.பி.யில் நிறைய பேர் உள்ளனர். அப்பனின் செல்வாக்கில் பெயர் போட்டவர் குவான் எங். குவான் எங் இல்லாவிட்டால், என்னமோ டி.ஏ.பி.கட்சியே இல்லாதது போல கட்டுரை உள்ளது, மலாக்கா மாநில கட்சித் தேர்தலில் 15 பேர் கொண்ட குழுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட இந்த லிம், பின்பு பினாங்கிற்கு ஓடி வந்தவர். அப்பனின் செல்வாக்கை பயன்படுத்தி வயிறு வளர்ப்பவர். லிம் இல்லாவிட்டாலும் டி.ஏ.பி.யை அழியவிடாமல் தோல் கொடுத்து தூக்கி பிடிப்பவர்கள் கட்சியில் இன்னும் நிறைய தலைவர்கள் உள்ளனர்.
குவான் எங் கம்பி எண்ணுவது கிட்ட தட்ட நிச்சயம்– நீதிதேவன்களாக உட்கார்ந்து இருப்பதுயார்? எல்லாம் அம்னோ நாஜிபு அல்தான் தூயா குஞ்சுகள். அரைவேக்காடு நீதிபதிகள்– நீதி என்றால் என்ன என்று தெரியுமா இவன்களுக்கு? எல்லாம் இன பண பலம்.
வரும் தேர்தலில் பி.என். அரசு ஆட்சி அமைத்தாலும் செலங்கோர் , பினாங்கு மாநிலம் எதிர் அணியிடம் தான் இருக்கும் என்பது வேறு ஒரு ஆய்வாளரின் கருத்து.
singam,தங்கள் கருத்து அபாரம்…
“லிம் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஊதிப் பெரிதாக்கி 1எம்டிபி விவகாரத்தையே மற்றகடிக்கவும் பிஎன் முயலலாம்…”
அரசியல் ஆய்வாளர்கள் “1MDB-யில் ஊழல் இருக்கிறது” என்பதை உறுதியாக கூறியதற்கு நன்றி.
குவான் எங் – அன்வார் சரி! ஆனால் பினாங்கு டி.ஏ.பி.க்கு கிட் சியாங் தலைமை ஏற்று முதலமைச்சர் ஆகலாம் இல்லையா! அவர்கள் என்ன இளிச்சவாயத் தமிழன் மாதிரியா!
பக்கத்தான் உடைய வேண்டும், அடுத்த தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்பதே தேசிய முன்னணியின் நோக்கம். மேலும் தேசிய முன்னணியில் நடக்கும் அட்டுழியங்கள் திசை திருப்பவது இது ஒரு அரங்கேற்றம். என்னதான் நல்லவன் போல் காட்டினாலும் ஒரு நாள் மக்களால் தூங்கி ஏறிய வேண்டிய காலம் வரும் தேசிய முன்னணி பன்னாடைகளுக்கு.
செல்வாக்கில்லாமல் தானா மாநில முதலைச்சர் ஆகி விட்டார் . அறிவுக்கு எட்டவில்லை . ஆளும் கட்சியில் கூட அவரைப்போன்று திறமையானவர் இல்லை . இந்நாட்டில் எதிர்கட்சியாளர் ஆட்சிக்கு வருவது அவ்வளவு சுலபமில்லை . சுரண்டல் பேர்வழிகள் மத்தியில் நேர்மையான ஆட்சிக்கு வந்த இழுக்குக்கு ஏற்பட்ட கதி. பினாங்கு வளர்ச்சி பொறுக்க முடியாத ஆற்றாமை . குப்புற தள்ளி ஏறி மிதிப்பதில் பெரும் சந்தோசம் . ஒரு கழுகு கூட்டம் ஒரு கண்ணை தோண்டி விட்டது . இன்னொரு கண்ணையும் தோண்ட தயாராகிவிட்டது . அரசியல் அசிங்க மாகிவிட்டது . ஆண்டவுனுக்கே சவால் விடும் கலியுகம் .
மாலைக்கார சிறுமியாக நீதி கேட்டு சிறையில் சென்றார் லிம் குங் எங் . அவரின் தியாகத்தை மறந்து விட்டீர்களா திரு சிங்கம் அவர்களே .
sitiawan அன்பரே! பள்ளி மாணவி ஒருவரை மானபங்கம் செய்து விட்டார் அப்போதைய மலாக்கா முதலமைச்சர் ரஹீம் தம்பி சிக். இந்த விஷயத்தை துண்டு காகிதத்தில் எழுதி மக்களிடையே கொடுத்து விட்டார் லிம் குவான் எங். துண்டு பிரசுரம் ஒன்று மக்களிடையே கொடுக்கப்படுமானால், அந்த பிரசுரத்தில் அடியில், அதனை வெளியிட்டவர், அச்சிட்டவர் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். இந்த கோழை, அவ்விரங்களை போடாததால், குற்றம் புரிந்தவரானார். அதன் விளைவாக தண்டிக்கப்பட்டு, சிறை சென்றார். மற்றபடி அந்த மலாய் பெண்ணுக்காக இவர் எத்தகைய தியாகத்தையும் செய்திடவில்லை. {திறைமையானோர் கட்சியில் அநேகர் இருக்க தனது பெண்டாட்டிக்கு சட்டமன்ற சீட் பெற போராடியதை வேண்டுமானால் தியாகம் என்று சொல்லலாம்}
Mr. moganavinothan ! பினாங்கு வளர்ச்சிபெற்றதோ இல்லையோ, வேறு விஷயம். பினாங்கில் வாழும் பெரும்பாலான இந்திய, குறிப்பாக தமிழர்களை அணுகி, லிமம்மின் லட்சணத்தை கேளுங்கள் , சொல்வார்கள்.
பினாங்கு எதிர்கட்சியிடம் வீழ்ந்த காலத்திலிருந்தே ஆளும் கட்சியை அவதூறு பேசுவதே ஒரு சிலருக்கு குறியாக/ தொழிலாக இருந்து வருகிறது.. குற்றம் நிரூபணம் ஆகும்வரை யாரும் குற்றவாளியில்லை. இருப்பினும், அரசியல் நோக்கத்தில் ஒரு கூட்டமே சதி செய்து உயிரோடு புதைக்க முயற்சிக்கிறது என்பதே பலரின் கருத்து…
ஐயா சிங்கம் அவர்களே- உங்களின் வயது என்ன என்று எனக்கு தெரியாது– ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் 1957 க்கு முன் பிறந்திருந்தால் இதுநாள் வரை நடைபெற்ற விஷயங்கள் புரியும். நாஜிபு மட்டும் எப்படி பிரதமன் ஆனான்? அவன் அப்பன் பிரமன். தற்போது தற்காப்பு அமைச்சராக இருப்பவன் யார்? முன்னாள் பிரதமனின் மகன் தான். இந்த நாட்டுக்காக இரெண்டு லிம்களும் வதைக்கப்பட்டிருக்கின்றனர்– ஒரு மலாய்க்கார பெண்ணுக்கு நீதிக்காக ஓர் ஆண்டு சிறையில் வேண்டுமே என்றே அடைக்கப்பார். ஒப்பிட்டு பார்த்தால் DAP – ஆயிரம் மடங்கு திறமை யுள்ள கட்சி– எனினும் அவர்களிடம் இன பாகுபாடு இல்லை என்று சொல்லமுடியாது– எல்லா இடங்களிலும் குறுகிய மனப்பான்மை உள்ள சுயநல வாதிகள் இருக்கின்றனர்- அரசியல் சாயல் கொண்ட எல்லா வழக்குகளும் பிரிட்டிஷ் நீதிபதிகளால் விசாரிக்க பட்டால் உண்மை புரியும். ஒரு காலத்தில் இருந்த ஜமீன் போன்று இக்காலத்தில் நடக்கிறது கேவலம். திருட்டு பிரதமன் என்று சிங்கை மலாய்க்காரனே சொல்லி இருக்கிறான்– சிறிது சிந்தியுங்கள். நம்மவர்கள் எந்த நிலை இருக்கின்றனர்? 1970 வரைக்கும் நம்மர்வகள் என்ன நிலையில் இருந்தனர்? அதையே மலாய்க்காரனுடன் ஒப்பிடுங்கள்– ஏன் இவ்வளவு வித்தியாசம்? இந்த நாட்டுக்கு 3 இனங்களின் ஒப்புதலின் பேரில் தான் சுதந்திரம் கிடைத்தது – ஆனால் தற்போது அம்னோ தான் சுதந்திரத்திற்கு போராடியது போல் பெரிய கதை கட்டி உண்மை தெரியாத அக்கறை இல்லாத மக்களை முட்டாள்களாக்கி வைத்திருக்கிறார்கள்– ஆனாலும் இதற்கு துணை போன துரோகிகள் MIC – MCA சப்பிகள். இன்னும் எவ்வளவோ — நான் உள்ளதை உண்மையை சொல்கிறேன் – நம்மை ஓரங் கட்டி சீரழித்தது அம்னோ அதில் மாற்று கருத்து இருக்க முடியாது– மாற்று கருத்து உள்ளவர்கள் அம்னோவின் எலும்பு துண்டு ருசித்தவர்கள்.
ஐயா, en thaai thamizh! நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.