பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று பிற்பகல் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கைச் சந்திக்கிறார்.
அச்சந்திப்பின்போது பினாங்கில் திடீர் தேர்தல் நடத்துவது தொடர்பில் பிகேஆரின் நிலைப்பாட்டை அஸ்மின் லிம்முக்குத் தெரியப்படுத்துவார் என்று அறியப்படுகிறது.
அஸ்மினுடன் பிகேஆர் தேர்தல் இயக்குனர்கள் சைபுடின் நசுத்தியோன், உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் ஆகியோரும் உடன் செல்கிறார்கள்.
அச்சந்திப்புக்குப் பின்னர் லிம் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துகிறார். அதில் அவர் மாநிலச் சட்டமன்றக் கலைப்புப் பற்றி அறிவிப்பார் என்று பலத்த ஊகம் நிலவுகிறது.