அம்பிகா: பிஎன்னின் நோக்கு போக்கு அறிந்தவர்களின் தோழமை எதிரணிக்கு நன்மையே

ambikaடாக்டர்  மகாதிர்   முகம்மட்   புதிய   கட்சி  அமைப்பது    காலத்தின்  கட்டாயமாகும்   என்கிறார்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்.

“இன்றைய   நிலையில்,    பிஎன்னில்  இருந்தவர்களுக்கும்   நஜிப்  அரசாங்கத்தை   எதிர்ப்போருக்கும்  ஒரு   தளம்   அமைத்துக்  கொடுப்பது   அவசியம்  என்றே  நினைக்கிறேன்”,  என  ஹகாம்  தலைவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

அது,  பல்வேறு  பிரச்னைகளோடு  போராடிக்  கொண்டிருக்கும்   எதிரணிக்கு   வலுச்  சேர்க்கும்   ஒன்றாகவே   அமையும்   என்று  அம்பிகா  நம்புகிறார்.

“பிஎன்னின்  நோக்கும்  போக்கும்   அறிந்தவர்களைத்   தோழர்களாகக்   கொண்டிருப்பது   எதிரணிக்குச்   சாதகம்தான்”,  என்றாரவர்.

மேலும்,  புதிய   கட்சி   பாஸ்  விவகாரத்துக்குத்   தீர்வு  காண்பதற்குக்கூட   உதவியாக  இருக்கக்  கூடும்     என்று  அம்பிகா  கூறினார்.