அமெரிக்க கூட்டரசு விசாரணை பிரிவு (எப்பிஐ) 1எம்டிபி புலன் விசாரணையில் ஈடுபட்ட மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தைப் பாராட்டியுள்ளது.
1எம்டிபி மீது புலன் விசாரணை செய்வதில் எம்ஏசிசி ‘அளவற்ற துணிச்சலை’ காண்பித்தது என அப்பிஐ அகப்பக்கத்தில் அதன் அனைத்துலக ஊழல் பிரிவுத் தலைவர் டேரில் வெக்னர் கூறினார்.
“இன்றைய நடவடிக்கை வெளிநாட்டு ஊழல் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை. எப்பிஐ அதன் அனைத்துலகப் பங்காளிகளுடன் சேர்ந்து இந்த நபர்களைக் கண்டுபிடித்து அவர்களின் ஊழல்களை வேரறுக்கும்.
“அந்த வகை குற்றங்களுக்கு அமெரிக்கா ஒரு பாதுகாப்பான புகலிடமாக இல்லாமலிருப்பதை உறுதிப்படுத்த கடுமையாக பாடுபட்டு வருகிறோம்”, என வெக்னர் கூறினார்.