1எம்டிபி- இலிருந்து பணம் கையாடப்பட்டதற்கு தற்போதைக்கு ஆதாரம் ஏதும் இல்லை எனச் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) முகம்மட் அபாண்டி அலி கூறினார்.
“பல்வேறு அமலாக்க நிறுவனங்களும் மேற்கொண்ட விசாரணைகளில் 1எம்டிபி-இல் பணம் கையாடப்பட்டதற்கு இதுவரை ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை”, என அபாண்டி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அபாண்டி உள்நாட்டு அமலாக்க நிறுவனங்கள் பற்றிக் குறிப்பிடுகிறாரா அல்லது வெளிநாட்டு நிறுவனங்களைக் குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை.
“1எம்டிபி -இல் பணம் கையாடப்பட்டதன் தொடர்பில் தனிப்பட்ட நபர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை” என்பதையும் ஏஜி சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க நீதித்துறை 1எம்டிபி பணம் கையாடப்பட்டதாகக் கூறி அதற்கு எதிராக சிவில் வழக்கு தொடர்ந்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது அபாண்டி இவ்வாறு கூறினார்.
இவனெல்லாம் உயர் அதிகாரி. வேலியே பயிரை மேய்ந்த கதைதான்– என்ன இது புதிது இல்லையே. இதுதான் காலம் காலமாக நடக்கிறதே. தெரியாமலா எல்லாம் நடக்கிறது–இதற்க்கு எல்லாம் வித்திட்டவனே சத்தம் போடுகிறான்–ஆனால் ஒன்றும் நடக்காது– இந்த ஈன கூட்டம் மிக பெரியது. இனம் மதம் சம்பந்த பட்டிருக்கிறதனால் ஒன்றும் நடக்காது–எப்போதும் போல் சிரித்துக்கொண்டே வங்கிக்கு செல்வான் கள்.
“1MDB பணம் கையாடப்பட்டதற்கு ஆதாரம் ஏதுமில்லை” என்பதிற்கு பதிலாக “1MDB பணம் கையாடப்பட்டது உண்மைதான் ஆனால் ஆதாரம்தான் இல்லை” என்று AG கூறியிருந்தால் நம்பும்படியாக இருந்திருக்கும்.
இவர் சரியான ஒரு புளுகாண்டி
ஆதாரம் இல்லை தானே? அப்புறம் என்ன! நீங்கள் பயப்பட வேண்டாம்!
என்ன ஆதாரம் தேவை ஐயா? திருடியவனே முன்வந்து ஆதாரம் காட்ட வேண்டுமா? அல்லது செய்யப்பட்ட புகாரை மையமாக வைத்து நீங்க ஆதாரம் தேட வேண்டுமா? வயிற்றுப் பசிக்காக பன் ரொட்டி எடுத்தவனுக்கு (உங்க பாஷையில் திருட்டு) செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் 2 வருடம் சிறை தண்டனை வாங்கித் தருவீர்கள், அப்படித்தானே? விளங்கிடும்…
இவரும் என்ன செய்வார் கூலிக்கு நடிக்கும் நடிகர் தானே தயாரிப்பு,கதை,திரைக்கதை,வசனம் அனைத்தும் அம்னோவாயிற்றே.
கள்வர்களையும் கயவர்களையும் நடுத்தெருவில் வைத்து செருப்பு பறக்க, விரட்டி விரட்டி அடிக்கும்வரை இந்த விவகாரம் ஒரு கண்ணாம்மூச்சி விளையாட்டாகவே தொடரும்!!! மக்கள் பலமே உண்மையை வெளி கொணர இயலும்!!!!