குடியுரிமை வழங்கப்படுவதாக நம்பி 3,000 பேர் என்ஆர்டிமீது படையெடுப்பு

nrdஅரசாங்கம்   நிரந்தர வாசிகளுக்கு   குடியுரிமை  வழங்கப்   போவதாகக்   கூறும்   பொய்யான      செய்தியை   நம்பி     மூவாயிரத்துக்கு    மேற்பட்டோர்    இன்று   காலை    தேசிய   பதிவுத்துறை(என்ஆர்டி)யை    முற்றுகையிட்டனர்.

குடியுரிமை   விண்ணப்பங்களைத்   தாக்கல்     செய்ய     பலர்   அதிகாலையிலேயே   அந்த   அலுவலகத்து    வந்ததாக    பெரித்தா  ஹரியான்   கூறியது.

இந்த    வாரம்    முழுக்கக்  குடியுரிமை  வழங்கப்படுவதாக   நம்பி     திங்கள்கிழமையிலிருந்தே    அவர்கள்  என்ஆர்டிமீது   படையெடுத்துக்  கொண்டிருப்பதாக   அதன்   பொது உறவு   அதிகாரி   பாரா   மாயா   அஹமட்  ஜெலானி   கூறினார்.

அப்படி   திட்டம்  எதுவும்  இல்லை  என்றும்    அவர்கள்   கேள்விப்பட்டது    பொய்யான    செய்தி   என்றும்    அவர்களுக்கு    எடுத்துரைக்கப்பட்டது.  ஆனாலும்  பலர்    திரும்பிச்  செல்லாமல்    அங்கேயே  சுற்றிக்  கொண்டிருந்தார்கள்.