அவசர பழுதுபார்க்கும் வேலைகள் நடப்பதால் பெட்டாலிங் ஜெயாவின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படும்.
பழுதுபார்க்கும் வேலைகள் இன்று நண்பகல் 12க்குத் தொடங்கி இரவு மணி 7வரை நடக்கும் என ஷரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் (சபாஷ்) ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
“செக்ஷன் 1-இலிருந்து 6வரை, ஜாலான் காசிங், செக்ஷன் 14, தாமான் கனகாபுரம், கம்போங் பாசிர், செக்ஷன் 51, செக்ஷன் 51ஏ, செக்ஷன் 22, எஸ்எஸ்9, எஸ்எஸ்9ஏ, கம்போங் பைடுரி ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
“அப்பகுதிகளில் கட்டம்கட்டமாக நீர் விநியோகம் திரும்பும்”, என அவ்வறிக்கை கூறிற்று.