ரிம10.5 மில்லியன் இழப்புக்கு இட்டுச் சென்ற ஒரு முதலீட்டு மோசடி விவகாரம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் நடிகர்.
புக்கிட் அமான் வணிகக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் துணை இயக்குனர் தாஜுடின் முகம்மட் ஈசா இதனை உறுதிப்படுத்தினார்.
“44வயது நடிகர்தான் அத்திட்டத்தின் சூத்திரதாரிக்கு வலது கையாக இருந்து செயல்பட்டிருக்கிறார்”, என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
மற்ற 13 பேர் பற்றி விவரம் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். விசாரணை இன்னமும் நடைபெறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
முதல் நம்பரே மோசடி என்னும் போது இவர்கள் எல்லாம் எம்மாத்திரம்!