மலேசியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவலத்திற்கு நஜிப் ரசாக்கின் அமைச்சரவையும் சமமான தவறுகள் செய்திருப்பதால், அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அம்பிகா வலியுறுத்தினார்.
மலேயாவில் நடந்துகொண்டுடிருக்கும் விவகாரங்களுக்கு நஜிப் மட்டும் குற்றவாளி அல்ல, ஒட்டுமொத்த அமைச்சரவையும் குற்றவாளியாகும் என்றாரவர்.
எதுவுமே பேசாமலிருக்கும் அமைச்சர்கள் அனைவரும் எதுவுமே செய்யாத பாவம் செய்தவர்களாவர் என்று அவர் ஒரு நிதி திரட்டல் நிகழ்ச்சியில் அமெரிக்க நீதித்துறை 1எம்டிபி விவகாரத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பற்றி பேசிய போது இவ்வாறு கூறினார்.
மின் மினி பூச்சிகளை என்ன செய்யும் ,,,பின்னால வெளிச்சம் வந்தா போதும் என்று இரவில் மட்டும் ஆத்தாங்கரை ஓரம் அலையும் ஒரு வெட்டில் இனங்கள்.
அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான். யாரும் அசைய போவதில்லை…?
அலி பாபாவும் அம்புட்டு திருடர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்..
அம்மா! எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க. என்னமோ சுதந்திரமான ஒரு ஜனநாயக நாட்டில் இருப்பதாக நினைப்போ! ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படம் பார்த்திருக்கிறீர்களா? 40 திருடர்களும் மறு பிறப்பெடுத்து நம் நாட்டிலேதான் உள்ளனர். [37 அமைச்சர்கள், AG , போலீஸ் தலைவர், சுப்ரிம் கோர்ட் நீதிபதி, ஆகிய மூவர்.] =40.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா ….
ருசி கண்ட பூனைகள் கொஞ்சம் கடினம் தான் ?????????
சிங்கமுன்னா சிங்கந்தாப்பா.
இதெல்லாம் நாம் சொன்னால் நம்மைத்தான் மொத்த வருவார்கள்!
இவன்கள் எல்லோரும் உள்ளே இருந்து கம்பி எண்ண வேண்டும் –ராஜினாமா மட்டும் அல்ல.
நமது நாட்டின் “கிழக்கை நோக்கி” கொளகை மக்களுக்கு மட்டும்தான் அரசியல்வாதிகளுக்கு அல்ல. நமது நாட்டு அரசியல்வாதிகள் “கிழக்கை நோக்கி” கொளகையை பின்பற்றியிருந்தால் இந்நேரம் பல ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பிரேதங்களாகி இருப்பார்கள்.
ஆட்சி மாற்றம் மட்டும்மேஹ் சரியான பதில் .