டிஏபி சிபூத்தே எம்பி தெரேசா கொக் எட்டாண்டுகளுக்குமுன் அஸான் விவகாரம் தொடர்பில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் ஏழு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும் எந்த ஆதாரமுமின்றி அவ்வாறு செய்யப்பட்டது என்றும் முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
போலீஸ் அவரைக் கைது செய்ததற்குச் சட்டப்படியான காரணம் எதையும் காண்பிக்கவில்லை என அது கூறிற்று.
அதற்காக கொக்கிற்கு ரிம350,000 இழப்பீடு கொடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேர்மையான வழியில் நீதியை வழங்கிய நீதிபதிக்கு மிக்க நன்றி,நாள் வாழ்துக்கள். தவறான நீதியை வழங்க.வழங்கப்பட வழியமைத்த,வழிவகுத்த வழக்கறிஞரும் ,அதற்கு ஏற்பாடு செய்த ஆர்வலர்களுக்கு தண்டனை வழங்கிடவேண்டும் . நன்றி .
நீதி தேவன் கண் சிறிது விழித்து கொண்டது போல் தெரிகிறது. ஆனால் ஏதும் நடக்கலாம் இந்த boleh land ல் .
ஆங்காரர்களிடம் இருந்து காப்பாற்றவே அவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தோம் என்ற சொன்ன காவல்துறை எங்கே?
குற்றம் நடந்தவுடன் போலீஸ் கப்பு கப்பு ன்னு புடிக்கிறது ஆனால் குற்றவாளியை அல்ல