கிளந்தானில் திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அம்னோவின் கோரிக்கையை மறுதலித்த கிளந்தான் மந்திரி புசார் அஹமட் யாக்கூப், மாநில அரசு பிரச்னை எதனையும் எதிர்நோக்கவில்லை என்றார்.
“திடீர் தேர்தல் நடத்தும் அளவுக்கு பாஸ் மாநில அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது என்பதற்கு ஆதாரமில்லை. வேண்டுமானால் மற்ற மாநிலங்களில் நடத்தலாம்”, என்று மந்திரி புசார் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
நேற்று கிளந்தான் அம்னோ துணைத் தலைவர் அஹமட் ஜஸ்லான் யாக்கூப் கிளந்தான் பாஸ் தலைவர்கள் தங்களுக்குள் சர்ச்சையிட்டுக் கொண்டிருப்பதால் அக்கட்சியின்மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று கூறியதாக சினார் ஹரியானில் வெளிவந்த செய்திக்கு எதிர்வினையாக அஹமட் யாக்கூப் இவ்வாறு கூறினார்.