பள்ளிக்கூடங்கள் அறுப்புக்கூடங்களாக மாற்றப்படக் கூடாது

“இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தின் சமய உணர்வுகளை சிறுபான்மை சமூகங்கள் மதிக்க வேண்டும் என்பது உண்மை தான். என்றாலும் பெரும்பான்மை சமூகமும் அவ்வாறு செய்வதும் அவசியமாகும்.”

 

 

MCCBCHST: பள்ளிக்கூடங்களில் மாடுகளை வெட்ட வேண்டாம்

டேவிட் தாஸ்: மலேசியா பல வகையான இனங்களையும் சமயங்களையும் கொண்ட நாடு. முஸ்லிம்களாக, பௌத்தர்களாக, இந்துக்களாக, கிறிஸ்துவர்களாக, சீக்கியர்களாக எப்படி இருந்தாலும் அனைத்து மலேசியர்களும் இந்த நாட்டுக்குச் சொந்தமானவர்கள்.

இந்த நாட்டை நியாயமாக நிர்வாகம் செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். கூட்டரசின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என அரசியலமைப்பு கூறுகிறது. அதே வேளையில் அது அனைத்து மலேசியர்களும் சமம் என்று கூறுவதுடன் சமய சுதந்திரத்தையும் வழங்குகிறது.

சமய நம்பிக்கைகளும் பாரம்பரியங்களும் சில சமயங்களில் குறுக்கிடலாம். அந்த அம்சங்களில் அரசாங்கம் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்துக்கள் மாடுகளைப் போற்றுகின்றனர். காரணம் அவை உணவுப் பொருளை வழங்குகின்றன. சமய நம்பிக்கை, பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் மாடுகளை கொல்வதுமில்லை. அதன் இறைச்சியை உண்பதும் இல்லை. எல்லா மலேசியர்களுக்கும் அது தெரியும்.

இந்து மாணவர்கள் பல்வி கற்கும் பள்ளிக்கூட வளாகங்களில் மாடுகளை வெட்டுவது உணர்ச்சிகரமான பிரச்னையாகும். அது சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கக் கூடாது.

நியாயமானவன்: இரண்டாவது திருமணத்தைக் கொண்டாடுவதற்காக, பண்பாட்டு காரணங்களுக்காக நாடாளுமன்றம் அறுப்புக் கூடமாக மாற்றப்படும் போது பின்பு ஒரு தேதியில் பள்ளிக்கூடங்களும் ஏன் ‘medan’, ‘taman’ களும் கூட மாற்றப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

ஐரோப்பாவில் பல அரசுகள் (விலங்குகள் தியாகம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்ளாதவை) தங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு விலங்குகளை அறுப்பதற்கான பாரம்பரிய முறைகள் பற்றி அல் அஸ்ஹார் பல்கலைக்கழகத்தின் பாத்வாவை நாடியுள்ளன.

சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அறுப்புக் கூடங்களில் அதனைச் செய்வதை அனுமதிக்கலாம் என அந்த பல்கலைக்கழகம் பாத்வா வெளியிட்டுள்ளது. விலங்குகளின் உரிமைகளுக்குப் போராடும் இயக்கங்களுடைய உணர்வுகளும் அதன் வழி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அது எல்லாத் தரப்புக்கும் பொருத்தமான நிலையாகும். நாம் அந்த “ஏற்றுக் கொள்ளும் நிலையை” எப்போதுதான் அடைவோம்?

ஒரே எம்: MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ ஆலோசனை மன்றம் மாடுகள் வெட்டப்படுவது மீது தனது உணர்வுகளை வெளிப்படுத்தியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

முஸ்லிம்கள் நாம் எப்போதும் அவர்களுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.  அவர்கள்,  மற்றவர்களுடைய உணர்வுகளையும் பரிசீலிக்கக் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டதாக நான் எண்ணுகிறேன்.

களைப்படைந்தவன்: MCCBCHST பிரச்னையே இல்லாத ஒரு விஷயத்தை சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றுவதாக நான் எண்ணுகிறேன். அந்த இரண்டு பள்ளிக்கூடங்களின் கூட்டங்களில் மாணவர்கள் முன்னிலையில் மாடுகள் வெட்டப்படக் கூடாது.

என் எக்ஸ்: இந்த நடவடிக்கை பல தசாப்தங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இப்போது ஏன் MCCBCHST கூச்சல் போடுகிறது?

ஸ்விபெண்டர்: நம் நாட்டில் இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தின் சமய உணர்வுகளை சிறுபான்மை சமூகங்கள் மதிக்க வேண்டும் என்பதே வருத்தமளிக்கும் உண்மை நிலையாகும். என்றாலும் பெரும்பான்மை சமூகம் தான் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை எனக் கருதுகிறது. பெரும்பாலும் இது ஒரு வழிப் பாதையாகும்.

இந்த சூழ்நிலை, மற்றவர்களை அப்பட்டமாக அலட்சியம் செய்வதாகும். அதற்கு அவர்கள் அதிமான எண்ணிக்கையில் இருப்பதும் அதிகாரத்துவ அந்தஸ்தும் ஆகும்.

சிறுபான்மையினர் அவர்களுடைய சமய உணர்வுகளை ஒரு முறையாவது மதிக்க விட்டால் போதும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி சிறுபன்மை மக்களுக்கு எதிராக வன்முறை மூளும் என மருட்டல் விடுக்கப்படும்.

அடையாளம் இல்லாதவன்_VV: இஸ்லாமிய சமய நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. தாங்கள் விரும்புவதை செய்ய முடியும் என்பதை சில அரசியல் தலைவர்கள் காட்ட முயலுவதே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

டாக்டர் ஜேக்கப் ஜார்ஜ்: அந்த வேண்டுகோளைத் தொடர்ந்து இன்னொரு புதிய சர்ச்சை உருவாகும். ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். MCCBCHST-யில் உள்ள தனி நபர்களுடைய கொடும்பாவிகள் எரிக்கப்படும்.
 
போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்படும். MCCBCHST அமைப்பில் உள்ளவர்களை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறும் அறைகூவல் விடுக்கப்படும்.

TAGS: