அம்பிகாவை விசாரித்தவர்கள், ஏன் மரினாவை விசாரிக்கவில்லை?

உங்கள் கருத்து: “இரண்டு ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த செக்சுவாலிடி மெர்டேகா நிகழ்வுக்குத் தலைமையேற்றவர் மரினா மகாதிர். அப்போது  ஏன் போலீசார் அவரை விசாரிக்கவில்லை?”

செக்சுவாலிடி மெர்டேகா விவகாரம் தொடர்பில் அம்பிகாவிடம் போலீசார் விசாரணை

மாற்றத்தின்முகவர்: செக்சுவாலிடி மெர்டேகா நிகழ்வுடன் தொடர்புகொண்டவர்களுக்கு போலீசார் கொடுக்கும் தொல்லைகள் இந்நாட்டில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் உயர்கல்வி பெறவும் அரசுச்சேவையில் சேரவும் சம வாய்ப்பு கிடைப்பதில்லை. சர்வாக் பூர்வ குடியினரின் நில உரிமை சிறிய தொகை கொடுத்துப் பிடுங்கப்படுகிறது.

நிலங்களின் பூர்விக சொந்தக்காரர்களே ஓராங் அஸ்லிகள்தான்.ஆனால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.எச்ஐவி நோயாளிகள் தெருக்களில் கவனிப்பாரின்றி கைவிடப்படுகிறார்கள். சிலர் அவர்களுக்கு உதவி செய்ய முனைந்தால் மதமாற்றம் செய்யப்பார்க்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.

இப்போது பாலியல் வேறுபாடு கொண்டவர்கள் நிம்மதியாக வாழும் உரிமைகூட இல்லாமல் போய்விட்டது.

சைமன் லீ: மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பெண்மணிகளான அம்பிகா ஸ்ரீநிவாசன், மரினா சின் அப்துல்லா, ஐரீன் பெர்னாண்டஸ் ஆகியோரே, நீங்களே உண்மையில் 1மலேசியா.

நீங்களே மலேசியர்களுக்கு மன ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருபவர்கள். ஊழல்மிக்க அரசின் அநீதிக்கு எதிராக மனித உரிமைகளை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் குரல் கொடுக்கும் உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. உங்கள் துணிச்சலுக்கும் தியாகங்களுக்கும் எங்களின் நன்றி. இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.

அபில்: நாம் அனைவருமே இறைவனின் பிள்ளைகள். சமுதாயத்தில் ஓரங்கட்டப்படுவோரைக் காக்கும் துணிச்சல் நம்  அனைவருக்குமே வேண்டும். நம்மால் “வித்தியசமானவர்கள்” என்று அழைக்கப்படும் அவர்களுக்கு நம் பரிவு தேவைப்படுகிறது.

இவர்கள் மோசமானவர்கள் அல்லர். ஊழல்கள், பொய்கள், மோசடிகள் போன்றவற்றின்மூலம் சமுதாயத்தைக் கொள்ளயடித்துக்கொண்டிருக்கிறார்களே அவர்கள்தான் மோசமானவர்கள்.

டாக்: இரண்டு ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த செக்சுவாலடி மெர்டேகா நிகழ்வுக்குத் தலைமையேற்றவர் மரினா மகாதிர். அப்போது  ஏன் போலீசார் அவரை விசாரிக்கவில்லை?

பதவி விலக சொன்ன அமைச்சரைச் சாடினார் அசீஸ் பாரி

பெண்டர்: உயர்கல்வி அமைச்சர் காலிட் நோர்டினுக்கு இது ஒரு நல்ல பாடம். உங்களைவிட கெட்டிக்காரரான ஒருவரைச் சீண்டிவிடக் கூடாது. 

இங்கு பேராசிரியர் அப்துல் அசீஸ் பாரி, சுல்தானிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டார், சட்டம் பற்றி அரசமைப்புப் பற்றிப் பேசினார் என்பது விவகாரமே அல்ல (அவர் சட்ட வல்லுனர், அவை பற்றிப் பேச தகுதி உண்டு).

பேசிய இடம்தான் சரியில்லை.அவர் அம்னோவில் இல்லையே. அம்னோவில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

தோர்: அசீஸ் பாரி உண்மை சொன்னதை காலிட்டால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பொதுத் தேர்தல் வருவதால் அது அம்னோவுக்குப் பாதகமாக அமையும் என்று அஞ்சுகிறார். மூன்றாம் தரப்பின்மூலம் அசீஸ் பாரியைப் பதவி விலகச் செய்ய முயன்று தோற்றுப்போன அவர் இப்போது அசீஸ் பாரியே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இனி, அசீஸ் பாரியால் எத்தனை நாள்களுக்கு அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பெயர் போட முடியும் என்று தெரியவில்லை.பேசாமல், உங்கள் கொள்கைகளையெல்லாம் தூரப்போட்டுவிட்டு பேராசிரியர்கள் பலரையும்போல் அம்னோவில் சேர்ந்து விடுங்கள். அதுதான் பிழைக்கும் வழி.

மனிதன்: காலிட்  நோர்டின் கல்வியில் சம்பந்தப்பட விரும்பினால் அரசியலைத் துறக்க வேண்டும். சட்ட விரிவுரையாளர்கள், அரசியல் விரிவுரையாளர் போன்றோரால் அரசியல் பற்றியோ, சமயம் பற்றியோ,தத்துவம் பற்றியோ பேசாதிருக்க முடியாது. எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது.

அபாசிர்: யுஐடிம் துணை வேந்தராக இருந்த பேராசிரியர் டாக்டர் இப்ராகிம் அபு ஷாவும் அவரால் நியமிக்கப்பட்ட அம்னோ ஆதரவுள்ளவர்களும் அரசியல் நடவடிக்கைகளில்  ஈடுபட்டார்களே, அது எப்படி முடிந்தது என்று அமைச்சர் விளக்குவாரா?

அரசியலில் ஈடுபடுவது தப்பு என்றால், கல்வியாளர்கள் என்ற போர்வையில் பொதுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக இருப்போர் எல்லாம் பணி துறக்க வேண்டும்.

எல் ஜோய்: பேராசிரியர் அவர்களே, உங்கள் பணி தொடரட்டும்.

அமைச்சர் கிடக்கிறார். அவருடைய அம்னோ-பிஎன் சகாக்கள் போலவே அவருக்கும் அரசியல் எது பொதுமக்கள் சேவை எது என்பது தெரியவில்லை.

கேஎஸ்என்: உண்மை பேசிய உங்களை எப்படியும் தண்டிக்க நினைக்கிறார்கள். ஆனால், என்ன செய்வதென்று தெரியவில்லை.ஆனால் நாடு நீங்கள் தொடர்ந்து உண்மையைப் பேச வேண்டும் என்பதைத்தான் எதிர்பார்கிறது. மலேசியாவைக் காக்க அது மிகவும் தேவை.

TAGS: