சமயங்களுக்கிடையில் சிவில் திருமணங்கள் பற்றி எழும் சர்ச்சைகளை சிவில் நீதிமன்றத்தில் தீர்ப்பதற்கு வகைசெய்யும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புக்குண்டுள்ளதாக பிரதமர் நஜிப் இன்று கூறினார்.
சட்டச் சீர்திருத்த (திருமணமும் விவாகரத்தும்) சட்டம் 1976 க்கான சட்ட திருத்தம் அடுத்த அக்டோபர் நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்படும் என்றாரவர்.
இது சம்பந்தப்பட்ட விவகாரங்கள் அடிக்கடி எழுகின்றன. அவற்றை தீர்ப்பதற்கான வழியைக் காண வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுகின்றன.
கொண்டுவரப்படும் சட்ட திருத்தத்திற்கு மூன்று அடிப்படை காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சிவில் திருமணத்தில் எழும் விவாகரத்து சம்பந்தமான பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றுக்கு சிவில் நீதிமன்றத்தில் தீர்வுகாண வேண்டும்.
இரண்டாவது, சம்பந்தப்பட்ட தம்பதிகள் தங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் அளிப்பதோடு அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதற்கு வழி செய்கிறது. அவர்கள், முஸ்லிம் அல்லாதவர்களானால், மறுமணமும்கூட செய்துகொள்ளலாம்.
மூன்றாவது, தம்பதியினரில் ஒருவர் இஸ்லாத்திற்கு மாறும் போது சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்களுக்கிடயில் மோதல் ஏற்படுகிறது. இப்போது இருக்கும் சட்டத்தில் இது பற்றிய குறைபாடு உண்டு. அதை இந்தச் சட்ட திருத்தம் தீர்க்கும் என்று பிரதமர் நஜிப் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக எப்பொழுதோ எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கை ! இப்போதாவது புத்தி வந்ததே என்று ஆறுதல் அடையலாம் !
தேர்தல் அடுத்த ஆண்டில் வரலாம் என்பதற்கு இது முன் மணியோசை!
இவனின் பேச்சை நம்பமுடியாது– நம்பிக்கை நாயகன். சட்ட வல்லுநர்கள் நன்றாக அலசி ஆராய்ந்து எந்த ஓட்டையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்– செய்வார்களா? நம்பிக்கையின் வழி நாம் படும் பாடு எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன்–ஆதலின் முஸ்லீம் அல்லாதார் ஒன்றுபட்டு செயல் பட வேண்டும். ஷாரியா அதன் மூக்கை நம் வாழ்வில் நுழைக்காமல் இருக்க வழி செய்ய வேண்டும்.
சிவில் திருமணத்தில் எழும் விவாகரத்து சம்பந்தமான பிரச்சனைகள் எதுவானாலும் அவற்றுக்கு சிவில் நீதிமன்றத்தில் தீர்வுகாண வேண்டும் என்று மட்டும்தான் கூறுகிறீர்கள்.
அப்படி தீர்வுகாண தவறும் பட்சத்தில் சம்பந்தபட்ட பெற்றோர்கள் அல்லது பிள்ளைகள் யாராயினும் இஸ்லாத்திற்கு மாற முடியாது என திட்டவட்டமாக கூறவில்லையே. அங்கேதானே இடிக்குது.
நம்ம மக்கள் மாற்றான் மதம் நாடுவது , மாற்றான் தாய் , மாற்றான் மனைவியை …….தேவையா தலைவலி …!?
ஒரு தமிழ் திரைபடத்தில் காமெடிக்காக இடம்பெற்ற வசனம் :-
பெண் : ஏய் யாரது
மகன் : எங்கம்மா புருஷன்
பெண் : எத்தனையாவது புருஷன்
மகன் : எங்கம்மா ஒரு ஓல்ட் டைப் இந்த புருஷனை சேன்ஜ் பண்ணுன்னு எத்தனையோ தடவை சொல்லிட்டேன் அது கேட்கலை எங்கம்மாவுக்கு வேணும்னா ஒரு சேன்ஜ் இல்லாம இருக்கலாம் எனக்கு ஒரு சேன்ஜ் வேணாமா எனக்கு ஒரு நியூ அப்பா வேணாமா
அப்பா : அட பாவி அவனவன் சட்டையை மாத்துவான் வீட்டை மாத்துவான் வேலையை மாத்துவான் நீ அப்பனையே மாத்த சொல்றீயா
பெண் : எங்க அமெரிக்காவிலே ஒரு பொண்ணுக்கு மூணு புருஷன் இருக்குது
மகன் : குட் நாடு
இப்படி நியூ அப்பாவுக்காக அப்துல்லாவை அம்மாவுக்கு மணமுடிக்க துடிக்கும் ஈன ஜென்மங்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.
கபாலி இந்த படம் ஆந்திராவில் திரையில் ஓடியபடம் ..
கதாநாயகியாக சினேகா நடித்திருந்தாக ..படுகவர்ச்சி !
சினேகா தமிழ் படத்தைபோருத்தவரை குடும்பபாங்கான நடிகை ..
தமிழில் விஷாலும் அஞ்ச்சளி என்கிற ஆந்திர நடிகையும் நடிசிருந்தாக …. இந்தப்படம் வெளியாகிய நேரம் திமுகா கட்சிகாரங்க படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினாக ..அவுக தலைவரை படத்தில அசிங்கமாக சித்தரித்துவிட்டாகலாம் …
மக்களை குழப்பி திசை திருப்பும் நாடகம்.
பிரதமர் என்ற நிலையில் உங்களுக்கு உள்ள அதிகாரத்தை வைத்து எப்பவோ முடித்து இருக்கவேண்டியதை இவ்வளவு காலம் இழுக்கடித்து இப்போது தீர்வு காண வந்ததற்கு மகிழ்ச்சிதான்..
எல்லாம் நாடக மேடை அதில் எங்கும் நடிகர் குடடம். உருவம் தெரிவது போலே, அவர் உள்ளம் தெறிவது இல்லை ….
தமிழர் எழுச்சிபறை இந்த படம் ஆந்திராவில் திரையில் ஓடியதா என்பது தெரியாது ஆனால் காமெடி டைம் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் ஒளியேற்றியபோது பார்த்தது இந்த காட்சியில் வெண்ணிறஆடை மூர்த்தி கவுண்டமணி நடித்திருந்தார்கள்