நாளை டாத்தாரான் மெர்தேக்காவில் நடைபெறவிருக்கும் #தங்காப்எம்ஒ1 பேரணியில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் அம்னோ உறுப்பினர் கைருடின் அபு ஹசான் கூறுகிறார்.
நாளை நண்பகலில் சிறிது நேரத்திற்கு மகாதிர் #தங்காப்எம்ஒ1 பேரணியில் கலந்துகொள்வார் என்றாரவர்.
மகாதிர் அப்பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்று பெர்சாத்துவான் மஹாசிஸ்வா மெலாயு மலேசியா வற்புறுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
பாஸ் கட்சி இப்பேரணியில் பங்கேற்குமா என்பதை தம்மால் கூற முடியாது என்று அக்கட்சியின் உதவிப் பொதுச் செயலாளர் (1) கைருல் ஃபைஸில் அஹமட் காமில் கூறினார்.
நாளை நடைபெறவிருக்கும் இப்பேரணியில் கலந்துகொள்வதற்கு அமனா இளைஞர் பிரிவு அதன் உறுப்பினர்களைத் திரட்டும் என்று இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் அது கூறிற்று.
பக்கத்தான் ஹரப்பான் இளைஞர் பிரிவும் அவ்வாறே செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரை ‘தங்காப்’ பண்ணாம இருந்தால் சரி.
இது ஒன்றும் பெரியதாக தெரியவில்லை நமது ஒரு தான தலைவன் இருக்கிறான் அவனை தங்கப் செய்தால் தமிழ் சமுதாயம் பெரிய பயன் அடையும் செய்யுமா நமது BERSIH. கோடி புண்ணியம் கிடைக்கும் . ஓம் ஓம் ஓம் சக்தி ஆதி பார சக்தி\
ஒன்றும் நடக்காது- காரணம் பெரும்பாலான கிராமத்து மலாய்க்காரன்களுக்கு எந்த கேடு கெட்ட மலாய்க்காரன் ஊழல்வாதி பதவியில் இருந்தாலும் மகிழ்ச்சியே. நீதி நியாயம் எல்லாம் வெறும் தேவை இல்லாத ஒன்று. எல்லாமே கிடைக்கும் போது ஏன் கவலைப்பட வேண்டும்? மலாய்க்காரன் அல்லாதோர் தானே பாதிக்கப்படுகின்றனர்– எல்லோரும் மலேசியர் என்ற எண்ணம் வேரூன்றி இருந்தால் கொஞ்சமாவது உறுத்தும்– நம்மைத்தானே எதிரிகள் என்று ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கின்றனர்?