கிர் தோயோ மதம் மாறியவரை இரண்டாவது மனைவியாக ஏற்றார்

 

Khirmaariesமுன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் கிர் தோயோ, 51, ஓர் அரசு ஊழியாரான கிரிஸ்டீன் ஸானிதிரா அப்துல்லாவை (39) தமது இரண்டாவது மனைவியாக இன்று திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஏப்ரலில் இஸ்லாத்திற்கு மதம் மாறிய கிரிஸ்டீனை நாட்டில்  நன்கு  தெரிந்திராத ஓர் இடத்தில் அவர் மணமுடித்தாக தெரிய வந்துள்ளது.

கிர் தோயோவுக்கு மிக நெருக்கமான வட்டாரம் இன்று இத்தகவலை பெர்னாமாவுக்கு தெரியப்படுத்தியது.