ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார், ஒன்றின் வரலாறு அல்லது பின்னணி பற்றி அறியாதவர்கள் அது குறித்துப் பேசக் கூடாது என்பதை இன்று மீண்டும் வலியுறுத்தினார்.
சுல்தான் ஆங்கில நாளேடான நியு ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் அவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ‘பங்சா ஜோகூர்’ கோட்பாடு மலேசியாவுக்கு நல்லதல்ல என்று கருத்துரைப்பது குறித்துத்தான் சுல்தான் அவ்வாறு கூறினார்.
“நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் பங்சா ஜோகூர் என்பது புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அதன் நோக்கம் ஒற்றுமைதான், வேற்றுமை அல்ல”, என்றாரவர்.
‘பங்சா ஜோகூர்’ என்பது தம் பாட்டனார் 1920-இல் உருவாக்கிய ஒரு கோட்பாடு என்று தெரிவித்த சுல்தான், “கூடுதல் ஒத்துழைப்புக்காகவும் நல்லிணக்கத்துக்காகவும் அமைதியான வாழ்க்கைக்காகவும்” மாநிலத்தில் உள்ள எல்லா இனத்தவரையும் ஒன்றிணைப்பதுதான் அதன் நோக்கம் என்பதை விளக்கினார்.
அக்கோட்பாடு இன்றைக்கும் பொருத்தமானதே என சுல்தான் இப்ராகிம் கூறினார்.
அப்படி போடு ஒரு நல்ல தலைவன்னுக்கு முன் மாதிரி இருக்க கூடியவர்.
what Johore ruler said is correct