“ஒரு தமிழ்ப்பள்ளிக்கு போய், அங்குள்ள கழிவறைக்கு போனால் அங்கு குண்டர் கும்பல் அடையாளங்களை காண்பீர்கள்”, என்ற வாசகத்தை நான் சொன்னதாக வெளியிட்ட மலேசியாகினி அவ்வாசகத்தை மீட்டுக்கொண்டதாக பசுபதி சிதம்பரம் கூறினார். இந்தத் தவறான பதிவை அடிப்படையாகக் கொண்டு மலேசிய நண்பன் நாளிதழ் பல அவதூறான செய்திகளை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது என்றார்.
கடந்த 26.8.2016 இல் மலேசியாகினியில் அலியா என்ற நிருபர் எழுதி பதிவு செய்த அந்தச் செய்தி வெளியானது. தாம் அப்படிச் சொல்லவில்லை என்று தம்முடன் தொடர்பு கொண்ட பலரிடம் தெளிவுபடுத்தியதாக பசுபதி கூறினார். ஆனால், அவதூறான செய்திகளை வெளியிட்ட மலேசிய நண்பன் இதுவரையில் தம்முடன் தொடர்பு கொண்டு எந்த விளக்கமும் பெறவில்லை என்றாரவர்.
இது சார்பாக தாம் மலேசியாகினியுடன் தொடர்பு கொண்டு உண்மையில் தாம் பேசியதை முழுமையாக வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதாக பசுபதி கூறினார். அதன் அடிப்படையில், அவர்கள் தாம் பேசியதை ஒப்புக்கொண்டு அதனை இன்று பிற்பகல் 2.44 மணியளவில் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“கபாலி திரைப்படம்: நிழலா, நிஜமா?” என்ற கலந்துரையாடலின் போது நான் பல தகவல்களை பகிர்ந்து கொண்டேன். வறுமைச் சூழலுக்கும் வன்முறைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசும் போது வறுமைச் சூழலில் உள்ள குழந்தைகள் தேசியப்பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பள்ளியில் படித்தாலும் அவர்களுக்கு ஏற்படும் தாக்கம் ஒன்றுதான்.”
“மேலும், ஒரு தமிழ்ப்பள்ளிக்கு போய், இங்கே அருகாமையில் உள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, கழிவறையைப் பாருங்கள். அங்கு 36, 18, 04, மற்றும் தேள் போன்ற சின்னங்கள் இல்லாவிட்டால் நல்லதுதான். ஆனால், தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இத்தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள்”, என்று கூறியதாக பசுபதி தெரிவித்தார்.
மேலும், தமிழ்ப்பள்ளியில் குண்டர்கும்பலின் தாக்கம் பற்றி கருத்துரைக்க முற்பட்ட ஒரு நபரை தாம் அவ்வாறு தமிழ்ப்பள்ளி என்று தனிமைப்படுத்த இயலாது என்றும் இதனை வறுமைக் கலாச்சார அடிப்படையில் காண வேண்டும் என்றும் தாம் அவருக்கு தெளிவுப்படுத்தியதாக பசுபதி விளக்கம் அளித்தார்.
தாம் சொல்லாத ஒன்றை சொன்னதாக அவதூறு பரப்புரை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பீர்களா என வினவிய போது, “எதற்கும் ஓர் எல்லை உண்டு, பொறுத்திருங்கள்”, என்றார் மைஸ்கில்ஸ் வாரியத்தின் நிருவாகியான வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம்.
சிண்டு முடுச்சி போட்டு விடுவதில் நம்மவர்கள் கைதேர்ந்தவர்கள் அதிலும் பத்திரிக்கை துறையில் உள்ளவர்கள் நம்மை பிடிக்க வில்லை என்றால் எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள்.
உலகத்துல இருக்கற எல்லாரும் கெடடவன், நீங்க மட்டும் தான் நல்லவன் ?
தடியை எடுத்தவன் எல்லாம் பாரதி ஆக முடியாது ,
அது போல் தான் பத்திரிகை நிருபர், இந்த குறுகிய நண்ப நிருபன் !
ஆனாலும், இடைநிலைப் பள்ளிகளில் இது தலைவிரித்தாடுகிறது. தெரிந்திருந்தும், என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டனர், சம்பந்தப் பட்டோர்.
குண்டர் கும்பல் இந்திய மாணவர்களிடையே அதிகம் உள்ளது .இதுதான் உண்மை.இதனை வெளிப்படையாக விவாத்து அதற்கு தீர்வு காணவேண்டியது நமது கடமை.அதைச் செய்யப்போய்தான் பசுபதி இப்பொழுது விமர்சனங்களுக்கு ஆளாகி போயுள்ளார். சொல்ல வந்த விடயத்தை காதில் வாங்காமல் சொன்னவரையே கரித்துக் கொட்டும் அளவிற்கு நம்மில் பல விவேகிகள் மலிந்துவிட்டனர்.
நீங்கள் கூறியதன் உட்பொருளையல்லவா அவ்விதழ் விவரித்துள்ளது!
காய்த்த மரம் கல்லடி படும் என்பது உலக இயல்பு!
இந்திய மாணவர்கள் குண்டர் கும்பலில் சேர்ந்து கொள்வது ! பள்ளி வளாகத்தில் தாலி கட்டி கொள்வது ! போதை வாஸ்து களுக்கு அடிமை யாவது ! இன்னும் பல விஷயங்கள் நடந்தேறி கொண்டுதான்! இருக்கின்றன ! இந்த அரசாங்கமும் இதை கண்டு கொள்ளாது ! இடை நிலை பள்ளியிலும் சரி ,தமிழ் பள்ளியிலும் சரி தமிழ் மாணவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள் ! தமிழ் கல்வியையும் ! தமிழ் பள்ளிகளையும் ! இந்து கோவில்களையும் வைத்து அரசியல் நடத்தி பொழப்பு நடத்தவும் ! களவாடி தின்னவும் தான் நமது அரசியில் வாதிகளுக்கு தெரியும் ! இந்த பிரச்சனைகள் எல்லாம் அவர்களுக்கு தெரியாது ! தெரிந்தும் கொள்ள மாட்டார்கள் ! அய்யா பசுபதி ! குண்டர் கும்பல் எங்கே உருவாகிறது ! யார் அதற்கு ஆதரவு தருகிறார்கள் ! என்பது உமக்கு தெரியாத ? நீர் இருப்பது தானும் படுக்காமல் ,தள்ளியும் படுக்காத தமிழ் இனம் ! வாய்ப்பிருந்தால் நாலு காசு பார்த்து விட்டு ! பொழப்பை பாரும் அய்யா !!
வணக்கம். ஐயா பசுபதி அவர்களே நீங்கள் சொல்லியதாக நாளிதழில் வெளிவந்த செய்தி நீங்கள் சொல்லவில்லை என்றாலும் அது உண்மை தான். பல பள்ளிகளில் இந்த சூழல் நிகழ்வது உண்மைதான். இன்று பத்திரிக்கையில் அறிக்கை விடும் சிலர் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ் பள்ளியில் குண்டர் கலாச்சாரம் இல்லை என்றால் எப்படி இடைநிலை பள்ளியில் நம் இன மாணவர்கள் அதிகம் குண்டர் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். தமிழ் பள்ளிக்கு சென்று அங்கு உள்ள மாணவர்களிடர் கேட்டுப்பார்க்கட்டும் அப்பொழுது உண்மை தெரியும். அதை விட்டு விட்டு உங்களை வசைபாடுவதால் இங்கு ஏதும் நன்மை ஏற்படாது .
இந்த சலசலப்பை பார்த்து சோர்ந்து போவது எங்கள் ஐயா பசுபதி அல்ல ,அவர் சமுதாயத்திற்க்காக போராடியதும் வாழ்வதும் நான் அவருடன் இருந்து பார்த்து இருக்கிறேன் ,அவரை வசைபாடுவது ஏதோ அவரை பார்த்து குறைப்பதுபோல் உள்ளது ,அய்யா உங்கள் சேவையை தொடருங்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் அய்யா.
இந்த உண்மை பல வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது . இதற்க்கு பின்னல் குண்டர் கும்பல்கல் அவர்களுக்கு பின்னல் அரசியல் பின்னணயில் கொண்ட தலைவர்கள் அவர்களில் பல பேர்கள் PIBG மற்றும் சமூகம் சேவைசெய்வது போல் கொண்ட கும்பல்கள் . இப்படி ஏராளம். இந்த சிக்கல்கல் மூல காரனே இந்திய அரசியல் குண்டர் கும்பல்.
இதையே வேறு ஒருவர் சொல்லி இருந்தால் இந்நேரம் துவைத்து பிழிந்து எடுத்திருப்பார்கள் இந்த அறிவு ஜீவிகள். நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே ….. மாமியாருக்கு ஒரு நீதியும் மருமகளுக்கு ஒரு நீதியும் தரும் கூட்டம் தானே இங்கே உள்ளது ?……………..
என்னமோ தமிழ் பள்ளியில் குண்டர் கும்பல் ஊடுருவி கோவணத்தையெல்லாம் கழற்றி விட்ட மாதிரியல்லவா பேசுகிண்றீர்கள். அப்படி இருந்தால் எந்த பள்ளி என்று சொல்லுங்கள் நாங்களும் சென்று விசாரித்து வருகின்றோம். சும்மா வெட்டிப் பேசு பேசுவதில் நம்மவர் வல்லவர் என்பதை நிரூபிக்கிண்றீர்கள்.