மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஸையும் அம்னோவையும் எதிர்த்துப் போட்டியிட அப்பகுதிகளைப் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பார்டி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வுக்கு விட்டுக்கொடுக்க பார்டி அமனா நெகரா (அமனா) தயாராகவுள்ளது.
14வது பொதுத் தேர்தலுக்காக தேர்தல் உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படுமானால் இதுவே அமனாவின் நிலைப்பாடாக இருக்கும் என அக்கட்சியின் தொடர்பு இயக்குனர் காலிட் சமட் தெரிவித்தார்.
“தேர்தல் உடன்பாட்டுக்காக ஒன்றுபட வழிவகை காண்பது அவசியம் அதற்காக, பெர்சத்து பக்கத்தான் ஹராபானில் சேர வேண்டிய கட்டாயம் இல்லை”, என்றார்.
“பெர்சத்து மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் போட்டியிடலாம், அமனா மலாய்க்காரர்- அல்லாதார் அதிகம் வாழும் பகுதிகளில் களமிறங்கலாம்”, என காலிட் கூறினார்.