இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், பேங்க் ரக்யாட் தலைவர் அப்துல் அசீஸ் சைனல்மீதும் நிர்வாக இயக்குனர் (எம்டி) முஸ்தபா அப்துல் ரசாக்மீதும் ரிம15 மில்லியன் மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இருவருமே குற்றத்தை மறுத்தனர்.
பெர்னாமாவின் கூற்றுப்படி தேசிய பிரமுகர் ஒருவர் பற்றி நூல் வெளியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மோசடி நிகழ்ந்திருக்கிறது.
முன்னதாக, மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) புலனாய்வு இயக்குனர் அசாம் பாகி, அவ்விருவர்மீதும் குற்றவியல் சட்டத்தின்கீழ் பலவகைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்றார்.