தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் கூட்டமைப்பு (பெர்சே) 5வது பெர்சே பேரணி நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளது.
பேரணி எந்த நாளில் நடைபெறும் என்பதை அது தெரிவிக்கவில்லை.
பேரணி நாளை அறிவிக்க செப்டம்பர் 14-இல் செய்தியாளர் கூட்டம் கூட்டப்படும் என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கூறினார்.
“நவம்பரில் பேரணி நடத்தப்படுவது உறுதி. ஆனால், பேரணி நாளைத் தெரிவிக்கப்போவதில்லை”, என மரியா புத்ரா ஜெயாவில் கூறினார்.
பேரணி டட்டாரான் மெர்டேகாவில்தான் நடக்குமா என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, தகவலறிந்த வட்டாரமொன்று நவம்பரில் இரு வார இறுதிகள் பேரணிக்காக அடையாளம் காணப்பட்டிருப்பதாக மலேசியாகினியிடம் தெரிவித்தது.