பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) ஓர் அரசியல் கட்சியாக அதிகாரப்பூர்வமாக பதிவு பெற்றுள்ளது. அதற்கான அங்கீகாரத்தைச் சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) இன்று வழங்கியது.
கட்சியின் தலைவர், அவைத் தலைவரின் பொறுப்புகள் குறித்து விளக்கம் பெற்றதை அடுத்து ஆர்ஓஎஸ் அதற்குப் பச்சைக் கொடி காட்டியது.
முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அக்கட்சியின் இடைக்காலத் தலைவராகவும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அதன் இடைக்கால அவைத் தலைவராகவும் இருப்பர்.
கட்சித் தலைவர், அவைத் தலைவர் பதவிகள் பற்றி விளக்கிய முகைதின் யாசின், “சரிபார்க்கவும் சரிபண்ணவும்தான் இந்த ஏற்பாடு”, என்றார்.
ஆர்ஓஎஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க கட்சியின் அடையாளச் சின்னத்தில் சிறிய திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் முகைதின் கூறினார்.
இதுதான் காலத்தின் கோலம். காலம் பதில் சொல்லும்
அய்யா மகாதீரரே, உமக்கு முன்பிருந்த மூன்று அமைச்சர்களின் காலத்திலும் இல்லாத அளவு இந்தியர்களை தரம் தாழ்த்தி அவர்கள் அரசியல், பொருளாதர, கல்வி உரிமைகளைப் பறித்து, ஒன்றுமில்லாமல் ஆக்கி, எங்கள் அரசியல்வாதிகளை கோமாளிகளாக்கி, சுயநலமிகளாக்கி, எங்கள் இளைஞர்களின் எதிகாலத்தை கேள்விகுறியாக்கி, அரசாங்க அனுகூலங்களை எங்களுக்கு எட்டாக்கனியாக்கி, எங்கள் மாணவர்களின் கல்வியிலும் தாழ்வுகள் வைத்து, எங்களை இந்நாட்டின் மூன்றாந்தரவாசிகளாய், முக்கியத்துவம் இழந்தவர்களாய் ஆக்கியதில் பெரும்பங்கு வகிக்கும் நீர் மேலும் கட்சி துவங்குகிறீரோ ? எதற்கு, இன்னும் மிச்சம் மீதி இருக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களையும் உருப்படியில்லாமல் செய்யவா ? உனது சுயலாபத்திற்காக எதையும் செய்யக்கூடிய ஆசாமி தானே நீர் ?
மகா தியரின் ஆட்சில் தான் மலேசிய இந்தியர்கள் தங்களின் உரிமைகளை இழந்தோம். நாங்கள் இறக்கும் போதுகூட இறைவனிடம் வேண்டி கொள்வது மகா தியரை போன்று இன்னோரு இன வெறியரை எங்களுக்கு கொடுத்து விடாதே என்பது தான். மறந்து விட வேண்டாம் அதில் உள்ள அனைவரும் அம்னோ என்ற குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.
இது செமங்கட் 46 மாதிரிதான் போகும் !
இதுதான் கோலத்தின் காலம். கோலம் சொல்லும் பதில்.
நீங்கலேல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டனி அமைச்சா நஜிப்புக்கு கொண்டாட்டம்தான்…..இனி உருபட்டாப்பலதான்.
மின்னல் கூறிய கருத்து உண்மையானது. மறுபடியும் வந்து நம்மை என்ன செய்ய போகிறாரோ. இப்போ இருப்பவர் பிரதமர் அதிக அளவு தமிழர்களுக்கு செய்து உள்ளார். ஆனால் அவரின் போதத காலம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தான தலைவன் செய்தான் என்ன செய்தான் இன்று தமிழ் மலர் பத்திரிகை பார்த்தல் தெரியும். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நமக்கு செய்த நல்லவை என்றால் தான தலைவனக்கு தெரியும்.
DHILIP2 ! இதை படிக்கவும் !! நமது சமூதாயத்தின் பின்னடைவுக்கு காரண கர்த்தா, அன்று மட மகாதீரின் ஆட்டத்துக்கெல்லாம் ஒத்து ஆடிய சாமிவேலுதான் காரணம் , நமது சமூதாயம் இதுவரைக்கும் அடைந்த ஏமாற்றங்களையும், தோல்விகளையும் பற்றித்தான் இங்கு எழுதி ஆறுதல் அடைந்து கொள்கிறோம் . என்னை பொறுத்த வரை இன்றய அரசியல் சூழ்நிலையை பார்த்தால், வந்தவனும் சரியில்லை வாய்ச்சவனும் சரியில்லை என்ற கதையாகிவிட்டது நமது எதிர்க்கட்சிகளின் போக்கு ! இந்திய சமூகத்தை காப்பாற்ற போகிறேன் , அவர்களை பொருளாதாரத்தில் உயர்த்திக்காட்டுகிறேன் என்று வாய் சவடால் பேசியவன் எல்லாம் இன்று பணக்காரனாகிவிட்டான் . நம் சமூகம் மட்டும் இளிச்சவாய்தனமாக இவனுங்கள நம்பி இன்னும் கொஞ்ச காலத்தில் நடு தெருவுக்கு வந்துவிடும் . நமக்கு இனிமேல் சாமி வேலு தேவையில்லை , சுப்பிரமணியம் தேவையில்லை , சரவணன் தேவையில்லை , இன்னும் சொல்லப்போனால் இந்த எதிர்க்கட்சியும் தேவை இல்லை !!!!! நமது சமூகத்துக்கு இப்போது தேவை ஒரு நெல்சன் மண்டேலாவோ அல்லது ஒரு அன் சான் சூ கி போன்ற சமூகத்துக்காக தியாகங்கள் செய்யக்கூடிய தலைவர்களோ அன்றி சுருட்டும் தலைவர்களல்ல ! இப்படியே எழுதிக்கொண்டிருந்தால் ஆகப்போவது ஒன்றும் இல்லை, செம்பருத்தி மூலமாக இந்த சமூகத்துக்கு நல்லது செய்ய நினைக்கும் நல்லவர்கள் ஒன்று கூடி ஆக்ககரமான முடிவுகளை எடுத்து இந்த சமூதாயத்தை உயர்த்தும் வழிவகைகளை காணலாம் . குறிப்பு : இதற்கு முன்பு வந்த தானை தலைவர்கள் எல்லாம் இப்படி சொல்லித்தான் நமது சமூதாயத்தை நாசமாக்கினார்கள் ! நாமும் அந்தவழி சேராமல் நல் வழி காண்போம் , நன்றி .
வரவேற்கிறேன் TAPAH BALAJI உங்கள் கருத்தை.
“வந்தவனும் சரியில்லை வாய்ச்சவனும் சரியில்லை என்ற கதையாகிவிட்டது” என்று tapah பாலாஜி எழுதி உள்ளீர்கள். உண்மை. ஒன்று கூடினால், உடனே தமிழன் தெலுங்கன் அவன் இவன் என்று ஆரம்பித்து விடுகிறார்கள் …. சில அறிவு ஜீவிகள் …. எனவே, தெரிந்தே நம் சமுதாயம் சறுக்கி கொண்டிருக்கிறது. முதலில் மா இ கா வை ஒளித்து கடடனும்….எதிரியை கூட மன்னிக்கலாம் துரோகியை அல்ல …
முகைதீன் யாசின் தலைமையில் மஹாதிரின் ஆதரவில் தோன்றி இருக்கும்
இந்த அரசியல் கட்சியை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது ! மகாதீரின் எதிரி அணுவார் இப்ராஹிம் மும் இணைந்து கொண்டிருக்கிறார் !! கேஹாடிலான் மூலமாக தான் ஒரு சில இந்திய வேட்ப்பாளர்கள் அரசியலுக்கு வந்தனர் !! வரும் பொது தேர்தலில் இந்தியர்களுக்கு கேஹாடிலான் மூலம் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகம் ! பெர்ஸாத்து ! கேஹாடிலான் ! பாஸ் ! மூன்றும் இணைந்து செயல் பட்டால் ! இந்தியர்களின் அரசியல் இந்நாட்டில் அஸ்தமனம் தான் !! பெர்ஸாத்து தலைவர் ஜோஹோரை பிரநிதித்தவர் ! சுப்ரமணியத்தின் சீட்டுக்கு ஆப்பு !! அம்பாள் வந்தாலும் என்னை அழிக்க
முடியாது என்ற தலை கணம் கொண்ட தானை தலைவன் மண்ணை கவ்வ வில்லையாஹ் !! !! தான் என்ற அகங்காரம் ஒரு மனிதனை அழித்துவிடும் !! என்ற விவேகானந்தரின் சொல்லுக்கு ஏற்ப ! அம்னோவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் பாதிக்கப்பட போவது பாரிஸான் தோழமை கட்சிகள் !! டி எ பி யிலும் நாம் எடுப்பார் கை பிள்ளைதான் ! ராமசாமி துணை முதலமைச்சர் !!ஒப்புக்கு சித்தப்பா !!முதலமைச்சர் எப்போதும் சீனன் தான் ! லிம் உள்ளுக்கு போனாலும் அவர் இடத்தை நிரப்புவது சீனனாக தான் இருக்க முடியும் ! ஆளும் கட்சியோ ! எதிர் கட்சியோ ! பினாங்கு முதலமைசர் சீனன் தான் ! லிம் கிட் சியாங் சொன்னது !! அம்னோவின் குழப்பத்தால் ம .இ கா மூடுவிழா காண்பது நிச்சயமாகிவிட்ட ஒன்று !! ம .இ .கா வின் தோற்றமும் முடிவும் என்று செம்பருத்தி ஒரு வரலாற்று நூல் எழுதினால் நாலு காசு பார்க்கலாம் !!