கூட்டணி அமைப்பதைவிட பிஎன்னை எதிர்ப்பதில் ஒத்துழைப்பதே முக்கியம்

khirஅடுத்த   பொதுத்   தேர்தலில்    பாரிசான்   நேசனலைத்     கோற்கடிப்பதற்கு   எதிர்க்கட்சிகள்   அனைத்தும்    ஒரே  கூட்டணியில்   இருந்துதான்    செயல்பட   வேண்டும்    என்ற  அவசியமில்லை .

கட்சிகள்  ஒன்று   சேர்வதைவிட   ஒத்துழைப்பது     அவசியம்    என     டிஏபி  தேசிய  பிரச்சாரப்   பிரிவு      உதவித்    தலைவர்     சைரில்    கீர்  ஜோஹாரி    கூறியதாக     சினார்  ஹரியான்     தெரிவித்தது.

“எதிரணி  (பிஎன்னுக்கு  எதிராக)  நேரடிப்  போட்டியில்   இறங்குவதே     நன்றாக   இருக்கும்.

“அரசாங்கத்தை    மாற்றி   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கைப்    பதவி   இறக்க    வேண்டுமென்றால்   ஒத்துழைப்பு    மிக  முக்கியம்.  அது   தவிர்க்க   இயலாதது”,  என  அந்த  புக்கிட்   பெண்டேரா     எம்பி    கூறினார்.