‘சட்டவிரோத பேரணிகளில் பங்கேற்காதீர் அவை நம் நல்லிணக்கத்தைக் குலைக்கும்’

kurupமலேசியர்கள்    நாட்டின்    நல்லிணக்கத்தைக்  கெடுக்கும்    சட்டவிரோத   பேரணிகள்  போன்ற   நடவடிக்கைகளில்  பங்கேற்கக்கூடாது.

இன்று  கோலாலும்பூரில்   மலேசிய   தினக்  கொண்டாட்டம்  ஒன்றில்  கலந்துகொண்ட    பிரதமர்துறை   அமைச்சர்   ஜோசப்  குருப்   இவ்வாறு   வலியுறுத்தினார்.

“மலேசிய   மக்களாகிய   நாம்,   சில    தரப்பினர்    ஏற்பாடு   செய்யும்  நாட்டின்   நல்லிணக்கத்தைக்  கெடுக்கும்    சட்டவிரோத    பேரணிகள்   போன்றவற்றில்  கலந்துகொள்ளக்  கூடாது..

“அவை (பேரணிகள்)  அனைத்துலக   அளவில்   நாட்டின்  பெயரைக்  கெடுக்கும்  நோக்கம்   கொண்டவை”, என  ஜோசப்   கூறினார்.