நேற்றிரவு நியு யோர்க், மேன்ஹட்டனில் ஷெல்சி குடியிருப்புப் பகுதிக்கு அருகில் நிகழ்ந்த ஒரு குண்டு வெடிப்பில் சுமார் 29 பேர் காயமடைந்தனர்.
அதிகாரிகள் அதை ஒரு கிறிமினல் செயலாகத்தான் கருதுகிறார்கள்.
அவ்வெடிப்புக்குப் பின்னணியில் ஒரு நோக்கம் இருப்பது தெரிகிறது என மேயர் பில் டி பிளாசியோ கூறினார்.
ஆனால், நியு யோர்குக்கு “அச்சுறுத்தல் இருப்பதாக நம்ப” ஆதாரமில்லை என்றாரவர். “பயங்கரவாதத்துடன் தொடர்பிருப்பதாக நாங்கள் கருதவில்லை”, என்றார்.
“எதனால் வெடிப்பு நிகழ்ந்தது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை, விரிவான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன”, என்று மேயர் சொன்னார்
இது மோ 1 சாதி வேலைதான் அமெரிக்காவில் எல்லா ஊடங்களும் ஆருடம் தெரிவித்துள்ளன.